News March 4, 2025
விராட் கோலி படைத்த மற்றொரு சாதனை

கிரிக்கெட் வரலாற்றில் பல சாதனைகளை இந்திய நட்சத்திர வீரர் விராத் கோலி படைத்து வருகிறார். பேட்டிங்கில் எப்படி அவர் கிங் என அழைக்கப்படுகிறாரோ அதேபோல் பீல்டிங்கிலும் கோலி அசத்துவார். அந்த வகையில் சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக கேட்சுகளை (235) பிடித்த வீரர் எந்த சாதனையை தனதாக்கியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் இந்த சாதனையை அவர் படைத்துள்ளார்.
Similar News
News March 5, 2025
ஸ்டேஷன் மாஸ்டரை பலி வாங்கிய கூகுள் மேப்!

நாடு முழுவதும் கூகுள் மேப்பால் உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில், இன்று மற்றொரு சோகம் நிகழ்ந்துள்ளது. டெல்லியைச் சேர்ந்த ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டரான பாரத் பார்தி (43) என்பவர் தனது உறவினர் திருமணத்திற்காக நொய்டாவுக்கு காரில் சென்றுள்ளார். அப்போது கூகுள் மேப் காட்டிய வழியில் சென்ற அவரது கார், நேராக ஒரு கால்வாயில் விழுந்தது. இதில் காருக்குள் தண்ணீர் புகுந்ததில் அவர் மூச்சுத் திணறி உயிரிழந்தார்.
News March 5, 2025
ரோகித்துக்கு பக்க பலமாக இருந்த தூண்கள்

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 1st Semi-Final-லில் AUS அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா (267/6) வீழ்த்தியது. ஆஸி., அணியில் கேப்டன் ஸ்மித் மட்டுமே சிறப்பாக செயல்பட்டார். மற்ற வீரர்கள் அவருக்கு உதவி செய்யவில்லை. ஆனால், இந்திய அணியில் கேப்டன் சரியாக விளையாடாத போதும், பேட்டிங்கில் கோலி, ஷ்ரேயாஸ், ராகுல், ஹர்திக், பவுலிங்கில் ஷமி, ஜடேஜா, வருண் சிறப்பாக செயல்பட்டு அணியை வெற்றிபெற செய்தனர்
News March 5, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச்.5) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டுமே இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!