News March 30, 2024
சென்னையில் குடிநீர் தேவை அதிகரித்துள்ளது

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சென்னையில் குடிநீர் தேவை அதிகரித்து உள்ளது. கடந்த சில நாட்களாக 1000 மில்லியன் லிட்டருக்கு அதிகமாக சப்ளை செய்யப்படுகிறது. ஒரு நாளில் அதிகபட்சமாக நேற்று 1071.4 மில்லியன் லிட்டர் தண்ணீர் வினியோகிக்கப்பட்டுள்ளது. சராசரியாக 1014 மி. லிட்டர் தண்ணீர் குடிநீர் குழாய் மற்றும் டேங்கர் லாரிகள் மூலம் சென்னையில் உள்ள குடியிருப்புகளுக்கும் அனுப்பப்படுகிறது.
Similar News
News August 14, 2025
நாளை விருது வழங்கும் முதல்வர் ஸ்டாலின்

சென்னை கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தின விழாவின்போது விருதுகள், காசோலைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்குவது வழக்கம். அதன்படி, நடப்பாண்டில், சிறந்த மாநகராட்சிகளாக ஆவடி, நாமக்கல் மாநகராட்சிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. சிறந்த நகராட்சிகளுக்கான விருதுகளுக்கு ராஜபாளையம், ராமேசுவரம், பெரம்பலூா் நகராட்சிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் இம்மாநகராட்சி, நகராட்சிகளுக்கு நாளை விருதுகளை வழங்குகிறார்.
News August 14, 2025
சென்னை டு திருச்சிக்கு சிறப்பு ரயில்

3 நாள்கள் தொடர் விடுமுறையையொட்டி முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி இன்று இரவு 11.10 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சை வழியாக திருச்சிக்கு முன்பதிவு இல்லாத மெமு ரயில் இயக்கப்படுகிறது. இதே ரயில் வரும் 17-ம் தேதி இரவு 10.50 மணிக்கு திருச்சியிலிருந்து தாம்பரம் வரை இயங்கும். (SHARE)
News August 14, 2025
மெட்ரோ ரயில் பயணிகள் கவனத்திற்கு

சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை சென்னை மெட்ரோ ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை சேவை நடைபெறும். பீக் ஹவர்சான மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிடங்களுக்கு ஒருமுறை இயக்கப்படும். கூட்டம் குறைவான நேரங்களில் மெட்ரோ ரயில்கள் ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கு இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.