News March 4, 2025
Driver போதையில் இருந்தாலும், பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு

விபத்தை ஏற்படுத்திய டிரைவர் குடிபோதையில் இருந்தாலும், இறந்தவரின் குடும்பத்திற்கு காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. சென்னையில் 2017ல் சாலையில் நடந்துசென்ற ராஜசேகர் என்பவர் வேன் மோதி உயிரிழந்தார். ஓட்டுநர் போதையில் இருந்ததால் காப்பீட்டு நிபந்தனைகளை மீறுவதாக கூறி, இறந்தவர் குடும்பத்துக்கு இழப்பீடு மறுக்கப்பட்ட நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 4, 2025
இத்தனை கொடூர மனிதர்களா? மோடி ஆவேசம்

குஜராத்தின் கிர் வனவிலங்கு சரணாலயத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள PM மோடி, இன்று வந்தாராவில் உள்ள விலங்குகள் ஹாஸ்பிட்டலுக்கு சென்றார். அப்போது அங்கு ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட மற்றும் பாகன்களால் சித்ரவதைக்கு உள்ளான யானைகளை அவர் பார்வையிட்டார். பின்னர் அவர் வெளியிட்ட பதிவில், மனிதர்களால் எப்படி இவ்வளவு கொடூரமாக நடக்க முடிகிறது? இதற்கு நாம் ஒரு முடிவுகட்ட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
News March 4, 2025
ஊழியர்களுக்கு சம்பளத்துடன் மதுபானம் தரும் நிறுவனம்

அமெரிக்காவை சேர்ந்த பிரபல மதுபான தயாரிப்பு நிறுவனம், ஜாக் டானியல்ஸ். இது மாதா மாதம் முதல் வெள்ளிக் கிழமைகளில் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் ஒரு Daniel’s Old No. 7 விஸ்கி பாட்டிலையும் ப்ரீயாக தருகிறது. டென்னஸி மாகாணத்தில் இந்நிறுவனம் அமைந்துள்ள மூர் கவுன்ட்டியில், மது விற்பனைக்கு தடை உள்ளது. ஆகவே, ஊழியர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் உதவ கொண்டுவந்த இப்பழக்கம், பல ஆண்டுகள் கடந்தும் தொடர்கிறது.
News March 4, 2025
221 குழந்தைகள் பாலியல் வன்கொடுமை SHOCKING

ஆப்பிரிக்க நாடான சூடானில், கடந்த ஓராண்டில் மட்டும் 221 குழந்தைகள் படையினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. அங்கு ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் இடையே போர் நடந்துவருகிறது. இதில் இதுவரை 20,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் 1.4 கோடி மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான குழந்தைகளில் 30% ஆண் குழந்தைகளாவர். போர் என்றால் மனிதமும் மறைந்துவிடுமா?