News March 4, 2025
ரோஹித் சர்மாவுக்கு ஆதரவு கரம் நீட்டிய யுவராஜ் சிங் தந்தை

ரோஹித் உருவத்தை விமர்சித்த ஷாமா முகமது பேச்சுக்கு யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் சிங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்திய வீரர்களின் உருவ அமைப்பை அவமதிக்கும் விதமாக இதுவரை யாரும் பேசியது இல்லை எனவும், PAK-இல் மட்டுமே இப்படி விமர்சிப்பார்கள் என்றும் கூறியுள்ளார். வீரர்களை அவமதிக்கும் இத்தகைய பேச்சுக்கு ஷாமா மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையேல் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அவர் சாடியுள்ளார்.
Similar News
News March 4, 2025
221 குழந்தைகள் பாலியல் வன்கொடுமை SHOCKING

ஆப்பிரிக்க நாடான சூடானில், கடந்த ஓராண்டில் மட்டும் 221 குழந்தைகள் படையினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. அங்கு ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் இடையே போர் நடந்துவருகிறது. இதில் இதுவரை 20,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் 1.4 கோடி மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான குழந்தைகளில் 30% ஆண் குழந்தைகளாவர். போர் என்றால் மனிதமும் மறைந்துவிடுமா?
News March 4, 2025
145 மருந்து, மாத்திரைகள் போலி: மத்திய அரசு

சர்க்கரை நோய், சளி மற்றும் கிருமி தொற்று போன்ற பிரச்னைகளுக்காக உட்கொள்ளப்படும் 145 மருந்து, மாத்திரைகள் தரமற்றது என மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக 1,000க்கும் அதிகமான மாத்திரைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் இமாச்சல், உத்தராகண்டில் தயாரிக்கப்பட்ட பெரும்பாலான மாத்திரைகள் போலியானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அந்த போலி மருந்துகளை <
News March 4, 2025
BREAKING: இந்தியா த்ரில் வெற்றி

CT தொடரின் 1st Semi-Final-லில் இந்தியா த்ரில் வெற்றிபெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. முதலில் பேட்டிங் செய்த ஆஸி., அணி 264 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா இலக்கை எட்டி வெற்றி பெற்று, 2023 WC ஃபைனலின் தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளது. இந்திய அணியில் அட்டகாசமாக விளையாடிய கிங் கோலி 84 ரன்கள் விளாசி அசத்தினார்.