News March 4, 2025
பாஜக – அதிமுக கூட்டணியா? பின்னணி என்ன?

நேற்று வேலுமணி மகன் திருமணத்திற்கு சென்ற அண்ணாமலையுடன் அதிமுக மூத்த தலைவர்கள் நெருக்கம் காட்டினர். அதேபோல், வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட தலைவர்களும் பாஜக உடன் கூட்டணி வைக்க விரும்பிய போதும், EPS விடாப்பிடியாக இருந்தார். இதற்கிடையில் தவெக உடன் கூட்டணி அமைக்கலாம் என கூறப்பட்ட நிலையில், கூட்டணி இல்லை என பிகே கூறிவிட்டார். இதனால், மீண்டும் பாஜக உடன் செல்ல இபிஎஸ் திட்டமிட்டுள்ளாரா என கேள்வி எழுந்துள்ளது.
Similar News
News March 4, 2025
பிரபல பாடகி கல்பனா தற்கொலை முயற்சி!

பிரபல பாடகி கல்பனா தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தில் வசித்து வந்த கல்பனா இன்று இரவு திடீரென தற்கொலைக்கு முயன்றார். தற்போது அவர் ஹாஸ்பிட்டலில் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் எதற்காக தற்கொலைக்கு முயன்றார் என்பது தெரியவில்லை. ‘என் ராசாவின் மனசிலே’ படத்தில் வரும் ‘போடா போடா புண்ணாக்கு’ பாடலை சிறு வயதில் பாடியவர் இவர்தான்.
News March 4, 2025
ஆழ்துளை எரிவாயு கிணறு அமைக்க வேண்டாம்: CM

PM மோடிக்கு, CM ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், தமிழ்நாட்டின் கடற்கரையோரத்தில், மன்னார் வளைகுடா பகுதியில் மத்திய அரசு மேற்கொண்டிருக்கும் கடல்சார் ஆழ்துளை எரிவாயுக் கிணறுகள் அமைக்கும் முயற்சியை கைவிட்டு, ஏல அறிவிப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஆழ்துளை எரிவாயு கிணறுகள் அமைத்தால் கடல்வாழ் உயிரினங்களுக்கு பெரும் சேதம் ஏற்படும் எனவும் அவர் அச்சம் தெரிவித்துள்ளார்.
News March 4, 2025
எந்த ஜாதியும் கோயில்களுக்கு உரிமை கொண்டாட முடியாது

எந்த ஜாதியும் கோயில்களுக்கு உரிமை கோர முடியாது என சென்னை ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. ஜாதி அடிப்படையில் கோயிலை நிர்வகிப்பது என்பது மத நடைமுறை அல்ல எனக் குறிப்பிட்ட கோர்ட், பெரும்பாலான பொதுக் கோயில்கள், சில ஜாதியினரின் கோயில்கள் என முத்திரை குத்தப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளது. மேலும், ஜாதி பாகுபாட்டில் நம்பிக்கை உள்ளவர்கள்தான் மதப் பிரிவு என்ற போர்வையில் வெறுப்பை உமிழ்வதாகவும் தெரிவித்துள்ளது.