News March 4, 2025
UNO-வில் எதிரொலித்த மணிப்பூர்… இந்தியா எதிர்ப்பு

காஷ்மீர் மற்றும் மணிப்பூர் குறித்து UNO மனித உரிமைகள் ஆணையத் தலைவர் வோல்கர் துர்க் தெரிவித்த கருத்துகளுக்கு IND எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தியா ஒரு ஜனநாயக நாடு, ஆதாரமற்ற கருத்துகள் அடிப்படை உண்மைக்கு மாறாக உள்ளதாகவும் இந்திய அதிகாரிகள் விளக்கமளித்தனர். முன்னதாக, காஷ்மீர் மற்றும் மணிப்பூரை குறிப்பிட்டு அமைதி மற்றும் மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என வோல்கர் துர்க் வலியுறுத்தியிருந்தார்.
Similar News
News March 4, 2025
ஜெர்மனியில் நர்ஸ் வேலை: ரூ. 2 லட்சம் சம்பளம்!

ஜெர்மனியில் நர்ஸாக பணிபுரிய 6 மாத அனுபவம் பெற்ற 35 வயதுக்குட்பட்ட டிப்ளமோ மற்றும் பட்டதாரிகளுக்கு தமிழக அரசு அழைப்பு விடுத்துள்ளது. இவர்களுக்கு ஜெர்மன் பயிற்றுவிக்கப்பட்டு ரூ.2 லட்சம் சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் omclgerman2022@gmail.com-இல் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு www.omcmanpower.tn.gov.in அல்லது 044-22505886 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். மார்ச் 15 கடைசி தேதி.
News March 4, 2025
என்னது.. நம்ம ஊர்ல தங்கமா..!

அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்தே, அதிக அளவில் தங்கம் எடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தமிழத்திலும் தங்கம் கிடைக்க சாத்தியம் உள்ளதாக இந்திய புவியியல் ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை, விருதுநகர், ராஜபாளையம் ஆகிய பகுதிகளில் பூமிக்கு அடியில் தங்கம் இருக்க சாத்தியக் கூறு இருப்பதாக அவர் கூறியுள்ளார். ஒருவேளை, நம்ம ஊரிலேயே தங்கம் கிடைத்தாலாவது விலை குறையுமா?
News March 4, 2025
வாரம் 5 நாள்தான் வேலை: வங்கி சங்கங்கள் கடிதம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளது. வங்கிகளில் தற்போது ஊழியர்கள் பற்றாக்குறை அதிகரித்துள்ளதால் ஊழியர்கள் வேலைப் பளுவால் கஷ்டப்படுவதாக அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கிகளில் காலிப் பணியிடங்களை நிரப்புவதோடு, வாரத்துக்கு 5 நாட்கள் மட்டும் வேலை நாட்களாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.