News March 4, 2025
மரண தண்டனை தராவிட்டால் தற்கொலை: நர்வால் தாயார்

காங்கிரஸ் பிரமுகர் ஹிமானி நர்வால் கொலை வழக்கில் குற்றவாளிக்கு மரண தண்டனை தரவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வதாக நர்வாலின் அம்மா கூறியுள்ளார். போலீசாரின் நடவடிக்கையில் தனக்கு திருப்தியில்லை என்றும், கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். அவ்வாறு தர முடியாவிட்டால் தனது தற்கொலைக்கு ஹரியானா அரசு பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 4, 2025
வாரம் 5 நாள்தான் வேலை: வங்கி சங்கங்கள் கடிதம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளது. வங்கிகளில் தற்போது ஊழியர்கள் பற்றாக்குறை அதிகரித்துள்ளதால் ஊழியர்கள் வேலைப் பளுவால் கஷ்டப்படுவதாக அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கிகளில் காலிப் பணியிடங்களை நிரப்புவதோடு, வாரத்துக்கு 5 நாட்கள் மட்டும் வேலை நாட்களாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
News March 4, 2025
சாம்பியன்ஸ் டிராஃபியை இந்தியா வெல்லும்: கங்குலி

CT தொடரில் இந்திய அணி கோப்பையை வெல்லும் என கங்குலி கூறியுள்ளார். இந்திய அணி வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் (டி20 மற்றும் ODI) நுட்பமாக விளையாடும் திறமை கொண்டிருப்பதால் கோப்பையை வெல்வதில் சிரமம் இருக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர், IND 2024இல் டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியது, 2023இல் ODI உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடியதை நினைவில் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
News March 4, 2025
குழந்தை காப்பாற்ற முயன்று பலியான மொத்த குடும்பம்

உ.பி.,யில் புலந்த்ஷர் என்னுமிடத்தில் நடந்த கோர விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். திருமணத்தில் பங்கேற்றுவிட்டு, காரில் மகிழ்ச்சியாக வீடு திரும்பிய வழியில், திடீரென எதிரே குழந்தை ஒன்று வர, அதன் மீது மோதுவதை தவிர்க்க முயன்றபோது, கார் அருகிலுள்ள கால்வாய்க்குள் பாய்ந்துள்ளது. இதில் காரில் இருந்த 5 பேரில் 12, 15, 16 வயது சிறுவர்கள் உள்பட 4 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.