News March 4, 2025
கரும்பு கொள்முதல் விலை உயர்வு.. விவசாயிகள் மகிழ்ச்சி!

2024 – 25ஆம் ஆண்டுக்கான பருவத்திற்கு கரும்பு கொள்முதல் விலையை அரசு உயர்த்தியுள்ளது. 9.50% (அ) அதற்கும் குறைவான சர்க்கரை திறன் கொண்ட ஒரு டன் கரும்புக்கு ₹3,151ஆக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 9.85% சர்க்கரை திறன் கொண்ட கரும்புக்கு ₹3,267ஆகவும், 10.10% சர்க்கரை திறன் கொண்ட கரும்புக்கு ₹3,344ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் பல லட்சம் விவசாயிகள் பலனடைவார்கள்.
Similar News
News March 4, 2025
என்னது.. நம்ம ஊர்ல தங்கமா..!

அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்தே, அதிக அளவில் தங்கம் எடுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தமிழத்திலும் தங்கம் கிடைக்க சாத்தியம் உள்ளதாக இந்திய புவியியல் ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை, விருதுநகர், ராஜபாளையம் ஆகிய பகுதிகளில் பூமிக்கு அடியில் தங்கம் இருக்க சாத்தியக் கூறு இருப்பதாக அவர் கூறியுள்ளார். ஒருவேளை, நம்ம ஊரிலேயே தங்கம் கிடைத்தாலாவது விலை குறையுமா?
News March 4, 2025
வாரம் 5 நாள்தான் வேலை: வங்கி சங்கங்கள் கடிதம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசுக்கு வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளது. வங்கிகளில் தற்போது ஊழியர்கள் பற்றாக்குறை அதிகரித்துள்ளதால் ஊழியர்கள் வேலைப் பளுவால் கஷ்டப்படுவதாக அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கிகளில் காலிப் பணியிடங்களை நிரப்புவதோடு, வாரத்துக்கு 5 நாட்கள் மட்டும் வேலை நாட்களாக அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
News March 4, 2025
சாம்பியன்ஸ் டிராஃபியை இந்தியா வெல்லும்: கங்குலி

CT தொடரில் இந்திய அணி கோப்பையை வெல்லும் என கங்குலி கூறியுள்ளார். இந்திய அணி வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் (டி20 மற்றும் ODI) நுட்பமாக விளையாடும் திறமை கொண்டிருப்பதால் கோப்பையை வெல்வதில் சிரமம் இருக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர், IND 2024இல் டி20 உலகக் கோப்பையை கைப்பற்றியது, 2023இல் ODI உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடியதை நினைவில் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.