News March 30, 2024
வேலூர்: 5 வேட்பாளர்கள் வாபஸ்!

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வேலூர் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் என மொத்தம் 50 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்திருந்தனர். இதில் 37 வேட்பாளர்களின் மனு ஏற்கப்பட்ட நிலையில், இன்று(மார்ச் 30) மதியம் 1 மணி வரை 5 வேட்பாளர்கள் தங்கள் மனுவை வாபஸ் பெற்றுள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலரும் கலெக்டருமான சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார்.
Similar News
News August 14, 2025
வேலூரில் மாணவர்கள் தான் டார்கெட்!

வேலூர், பள்ளிகொண்டா பகுதியைச் சுற்றியுள்ள பள்ளி (ம) கல்லூரி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்பதாக காவல் நிலையத்திற்கு புகார்கள்கள் வந்தது. இந்நிலையில் ரகசியமாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் சிலரிடம் சந்தேகத்தின் பெயரில் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் சிலருடைய மொபைல் எண்களை சோதனை செய்ததில் போதை மாத்திரை மற்றும் ஊசிகளை விற்றது தெரியவந்தது. இதுபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News August 14, 2025
முதல்வர் உலக கோப்பை போட்டி முன்பதிவிற்கு அவகாசம் நீட்டிப்பு

முதலமைச்சர் கோப்பை போட்டிகள் 2025 மாவட்ட, மண்டல, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க இணையதள முன்பதிவு (online registration) https://cmtrophy.sdat.in/https://sdat.tn.gov.in செய்திட வரும் ஆகஸ்ட் 20-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தங்கள் மாவட்ட விளையாட்டு அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம் என தகவல் தெரிவித்துள்ளனர்.
News August 14, 2025
வேலூர்: ஆரம்ப சுகாதார நிலையத்தில் வேலை

வேலூர் மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்பில் தற்காலிக பணிய நியமன அடிப்படையில் ஆரம்ப சுகாதார நிலையங்களில், staff nurse, lab technician grade 3, உள்ளிட்டபணியிடங்களுக்கு இந்த <