News March 4, 2025
எனக்கு கற்றுத்தர கூடிய தகுதி யாருக்கும் இல்லை: சீமான்

சென்னை விமான நிலையத்தில், செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், “இதை எப்போதோ பேசி முடித்து இருக்க வேண்டும் என சொல்கிறார்கள். வார்த்தை நாகரீகம் சொல்லும் அந்த தலைவர்கள் யார்? அந்த நடிகையை ஒருத்தரும் கண்டிக்கவில்லை. வார்த்தை கண்ணியம் நாகரீகம் பற்றி யாரும் எங்களுக்கு கற்றுத்தர வேண்டியதில்லை. எங்களுக்கு கற்றுத்தர கூடிய தகுதி எந்த தலைவர்களுக்கும் இல்லை” எனத் தெரிவித்தார்.
Similar News
News August 23, 2025
சென்னையில் தாலுகா வாரியாக மழை நிலவரம்

சென்னையில் நேற்று காலை 8:30 மணி முதல் இன்று காலை வரை பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக, சோழிங்கநல்லூரில் 98.5 மி.மீ, புரசைவாக்கத்தில் 77.6 மி.மீ, அம்பத்தூரில் 58 மி.மீ, தண்டையார்பேட்டையில் 46 மி.மீ, மாம்பலத்தில் 41.2 மி.மீ மற்றும் பெரம்பூரில் 40.3 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இந்த தகவலை தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது.
News August 23, 2025
சென்னையில் தூய்மை பணியாளர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

சென்னை, கண்ணகி நகரில் இன்று காலை தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த வரலட்சுமி (50) என்பவர், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இவர் சென்னை மாநகராட்சியில் ஒப்பந்தப் பணியாளராக வேலை செய்து வந்தவர். இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து, பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவியர் மின்சார கம்பிகள் மற்றும் உபகரணங்கள் உள்ள இடங்களில் கவனமாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
News August 23, 2025
சென்னையில் தெருநாய் தொல்லையில் இருந்து தப்பிக்க! 2/2

நீங்கள் பயந்தால் அதை நாய்களால் உணர முடியும். எனவே பயத்தை வெளிக்காட்டாமல் இருக்க வேண்டும். நாய் உங்களை நோக்கி வந்தால் அதை திசை திருப்ப உங்கள் கையில் இருக்கும் பொருளை கீழே தூக்கி வீசலாம் அல்லது கீழே குனிந்து கல் எடுப்பது போல பாவனை செய்யலாம். பைக்கில் போனால் நாயை கண்டதும் வேகமாக முறுக்க கூடாது. முக்கியமாக நாய் மீது எதையும் தூக்கி வீச கூடாது. இதை உங்கள் குழந்தைகளுக்கு சொல்லி கொடுங்கள். ஷேர் பண்ணுங்க!