News March 4, 2025
20 மனைவிகள், 104 பிள்ளைகள், 144 பேரக்குழந்தைகளா!

இந்த அதிசய மனிதர் டான்ஸானியாவில் வசித்து வருகிறார். 1961ல் முதல் திருமணம் செய்தவரின் பழங்குடியினத்தில் அடுத்தடுத்த திருமணங்களுக்கு தடையில்லை என்பதால், 20 பெண்களை அவர் மணமுடித்துள்ளார். அனைத்து மனைவிகளுடனும் அவர் ஒரே வீட்டில்தான் வாழ்கிறார். 104 வாரிசுகளின் மூலம் அவருக்கு 144 பேரன், பேத்திகளும் துள்ளி விளையாடுகிறார்கள். இந்த குடும்பமே ஒரு கிராமம் போல, அதன் ராஜாவாக கபிங்கா வாழ்கிறார்.
Similar News
News January 5, 2026
அரசுப் பள்ளி மாணவர்களின் தகவல்.. ஐகோர்ட் காட்டம்

அரசுப் பள்ளியில் பயிலும் 9 -12ம் வகுப்பு மாணவர்களின் பின்புல தகவல்களை சேகரிக்குமாறு TN அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை மதுரை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. இதுபோன்ற தகவல்களை சேகரித்து என்ன செய்யப் போகிறீர்கள் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இது மாணவர்களின் தனி உரிமையை பாதிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளனர். மேலும், தனியார் பள்ளி மாணவர்களின் தகவலை இதேபோல் சேகரிக்க முடியுமா எனவும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.
News January 5, 2026
திமுகவில் இருந்து விலகி விஜய் கட்சியில் இணைந்தார்

திமுக, அதிமுக, தவாக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் இன்று விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளனர். காலை முதலே பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், திமுகவின் தஞ்சை மத்திய மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் சி.சுந்தரபாண்டியன் தவெகவில் ஐக்கியமாகியுள்ளார். மேலும், தவாகவை சேர்ந்த ஜெகதீச பாண்டியன், காமராஜரின் பேத்தி மயூரி, நடிகர் வேல ராமமூர்த்தியின் மகன் ராஜ்மோகன் உள்ளிட்டோரும் தவெகவில் இணைந்துள்ளனர்.
News January 5, 2026
BREAKING: சென்னையில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டது

சென்னை, சேத்துப்பட்டில் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்தில் சிக்கியது. சேத்துப்பட்டு பணிமனையிலிருந்து எழும்பூர் ரயில் நிலையத்திற்கு இயக்கப்பட்டபோது, இந்த விபத்து நிகழ்ந்தது தெரியவந்துள்ளது. ரயிலில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரிய பாதிப்பு இல்லை; அந்த வழித்தடத்தில் மட்டும் ரயில்கள் இயக்கப்படவில்லை எனவும், சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


