News March 4, 2025
BREAKING: மகாராஷ்டிரா அமைச்சர் முண்டே ராஜினாமா

மகாராஷ்டிரா உணவுத்துறை அமைச்சர் தனஞ்செய் முண்டே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பீட் மாவட்டத்தில் கடந்த டிச. மாதம் பஞ்சாயத்து தலைவர் சந்தோஷ் தேஷ்முக் படுகொலை செய்யப்பட்டார். இதில், அமைச்சருக்கும் தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன. இந்நிலையில், இந்த வழக்கில் அமைச்சரின் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து NCPயை சேர்ந்த முண்டே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
Similar News
News March 4, 2025
அதிமுக பாஜகவுக்கு எதிரி அல்ல: அண்ணாமலை

BJP உடன் ADMK கூட்டணி வைக்க EPS விரும்புவதாக செய்தி வெளியானது. இது குறித்த கேள்விக்கு, அதிமுக தங்களுக்கு எதிரி அல்ல என அண்ணாமலை சூசகமாக பதிலளித்துள்ளார். அதிமுக கூட்டணிக்கு வந்தால் ஏற்பீர்களா? என்ற கேள்விக்கு, இன்னும் காலம் இருக்கிறது. பொறுத்திருந்து பாருங்கள், பல மாற்றங்கள் நிகழும் எனக் கூறிய அவர், தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம்பெறும் என்பதை தற்போதே கூற முடியாது என்றார்.
News March 4, 2025
EPS பேச்சால் DMDK அதிருப்தி.. கூட்டணியில் விரிசல்?

தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த மாதம் 12ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தபோதே தேமுதிகவுக்கு ஒரு ராஜ்யசபா சீட்டு என உடன்படிக்கை கையெழுத்தானதாக கூறியிருந்தார். அதனை இபிஎஸ் மறுத்துள்ளது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் யார் சொல்வது உண்மை?
News March 4, 2025
அதிமுகவில் அனைவருமே தலைவர்கள் தான்: இபிஎஸ்

அதிமுகவில் இருக்கும் அனைவருமே தலைவர்கள் தான் என இபிஎஸ் கூறியுள்ளார். அனைத்து மக்களுக்கும் சொந்தமான கட்சி எனவும், அதிமுகவில் மட்டும் தான் சாதாரண தொண்டர்கள் கூட உச்சபட்ச அதிகாரத்திற்கு வர முடியும் என்றும் பெருமிதம் தெரிவித்தார். தங்களை பலர் முடக்க பார்த்தும் முடியவில்லை என கூறிய அவர், தங்களின் ஒரே எதிரி திமுக மட்டும் தான் என்றார். மேலும், திமுகவை வீழ்த்த தாங்கள் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.