News March 30, 2024
திருப்பூர்: விழிப்புணர்வு நோட்டீஸ் ஒட்டிய கலெக்டர்

திருப்பூர் மக்களவை தொகுதியில் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று(மார்ச் 30) திருப்பூர் காமராஜ் சாலையில் உள்ள கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையத்தில் தவறாமல் அனைவரும் வாக்களிப்போம் என்ற விழிப்புணர்வு வாசகம் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கரை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் பேருந்துகளில் ஒட்டினார்.
Similar News
News February 7, 2026
திருப்பூர்: டிகிரி போதும்.. வங்கியில் வேலை

பஞ்சாப் நேஷனல் வங்கியில் 5,138 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1) ஏதேனும் ஒரு டிகிரி போதும்.
2) வயது வரம்பு: 20 முதல் 28.
3) சம்பளம்: ரூ.15,000
4) விண்ணப்பிக்க<
5) கடைசி நாள்: பிப்.24-ம் தேதி ஆகும்.
(வேலை தேடுபவர்களுக்கு Share பண்ணுங்க)
News February 7, 2026
திருப்பூர்: இலவச வீடு.. எப்படி விண்ணப்பிக்கலாம்

ஏழைகளின் வீடு கட்டும் கனவை நிறைவேற்றும் வகையில் மத்திய அரசு ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டத்தின் மூலம் வீடு கட்டுவதற்கு ரூ.2.67 லட்சம் வரை மானியமாக வழங்குகிறது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://pmaymis.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஆதார், வங்கி கணக்கு விவரம், பட்டா, சிட்டா, வருமானச் சான்று ஆகியவை முக்கியம் ஆகும். (Share)
News February 7, 2026
தாராபுரம் அருகே நேருக்கு நேர் மோதி விபத்து

தாராபுரம் – உடுமலை சாலையில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட் அருகே நேற்று இரவு இரண்டு இருசக்கர வாகனங்கள் எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் இருசக்கர வாகனங்களில் பயணித்த நான்கு பேரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். விரைந்து வந்த ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்த 4 பேரும் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக தாராபுரம் GH-க்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


