News March 4, 2025
அப்பல்லோ ஹாஸ்பிட்டல் விரைந்த மு.க.அழகிரி

மூச்சுத் திணறல் காரணமாக சென்னை அப்பல்லோ ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டுள்ள தாயார் தயாளு அம்மாளை நேரில் சந்தித்த மு.க.அழகிரி, உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். நேற்று இரவு தயாளு அம்மாள் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்ததும் மதுரையிலிருந்து விரைந்த அவர், டாக்டர்களிடம் தாயாரின் உடல்நிலை, சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.
Similar News
News March 4, 2025
அதிமுகவில் அனைவருமே தலைவர்கள் தான்: இபிஎஸ்

அதிமுகவில் இருக்கும் அனைவருமே தலைவர்கள் தான் என இபிஎஸ் கூறியுள்ளார். அனைத்து மக்களுக்கும் சொந்தமான கட்சி எனவும், அதிமுகவில் மட்டும் தான் சாதாரண தொண்டர்கள் கூட உச்சபட்ச அதிகாரத்திற்கு வர முடியும் என்றும் பெருமிதம் தெரிவித்தார். தங்களை பலர் முடக்க பார்த்தும் முடியவில்லை என கூறிய அவர், தங்களின் ஒரே எதிரி திமுக மட்டும் தான் என்றார். மேலும், திமுகவை வீழ்த்த தாங்கள் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
News March 4, 2025
Driver போதையில் இருந்தாலும், பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு

விபத்தை ஏற்படுத்திய டிரைவர் குடிபோதையில் இருந்தாலும், இறந்தவரின் குடும்பத்திற்கு காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என ஐகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. சென்னையில் 2017ல் சாலையில் நடந்துசென்ற ராஜசேகர் என்பவர் வேன் மோதி உயிரிழந்தார். ஓட்டுநர் போதையில் இருந்ததால் காப்பீட்டு நிபந்தனைகளை மீறுவதாக கூறி, இறந்தவர் குடும்பத்துக்கு இழப்பீடு மறுக்கப்பட்ட நிலையில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
News March 4, 2025
ரோஹித் சர்மாவுக்கு ஆதரவு கரம் நீட்டிய யுவராஜ் சிங் தந்தை

ரோஹித் உருவத்தை விமர்சித்த ஷாமா முகமது பேச்சுக்கு யுவராஜ் சிங் தந்தை யோக்ராஜ் சிங் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்திய வீரர்களின் உருவ அமைப்பை அவமதிக்கும் விதமாக இதுவரை யாரும் பேசியது இல்லை எனவும், PAK-இல் மட்டுமே இப்படி விமர்சிப்பார்கள் என்றும் கூறியுள்ளார். வீரர்களை அவமதிக்கும் இத்தகைய பேச்சுக்கு ஷாமா மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையேல் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று அவர் சாடியுள்ளார்.