News March 4, 2025
டெலிகிராமில் லிங்க் அனுப்பி ரூ.6.38 லட்சம் பறிப்பு

காட்பாடியை சேர்ந்தவர் பிரதாப், 34, தனியார் நிறுவன ஊழியர். இவரது மொபைல்போனுக்கு டெலிகிராமில் முதலீடு செய்தால், அதிக லாபம் தருவதாக ஒரு மெசேஜில் கூறப்பட்டிருந்தது. இதை நம்பி, அந்த எண்ணுக்கு 6.38 லட்சம் ரூபாயை அனுப்பியுள்ளார். பணம் திரும்ப வராததால், சந்தேகமடைந்து அந்த மொபைல்போனை தொடர்பு கொண்டபோது ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்தது. மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த பிரதாப், போலீசில் புகாரளித்துள்ளார்.
Similar News
News July 7, 2025
மது போதையில் பாலியல் பலாத்காரம்

வேலுரைச் சேர்ந்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. தோழி, 2 ஆண் நண்பர்களுடன் சென்னையில் உள்ள லாட்ஜில் மது அருந்தியபோது, மது போதையால் மயக்கத்தில் இருந்த அப்பெண்ணிடம் ஆண் நண்பர்களில் ஒருவர் இவ்வாறு செய்துள்ளார். கண் விழித்து பார்த்தபோது அப்பெண் ஆடை இல்லாமலும், பிறப்பு உறுப்பில் காயத்துடனும் இருந்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் தோழி, ஆண் நண்பரை கைது செய்தனர்.
News July 7, 2025
முன்விரோத தகராறில் வாலிபரை தாக்கிய சகோதரர்கள் கைது

வேலூர் சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஞானசேகரன் (25) கூலித்தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த யூசுப்கான்(23), இவரது அண்ணன் ஆசிப்(25) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்றிரவு ஞானசேகரனை வழிமறித்து சகோதரர்கள் இருவரும் ஞானசேகரனை தாக்கியுள்ளனர். இதுகுறித்து ஞானசேகரன் அளித்த புகாரின் பேரில் நேற்று (ஜூலை 6) வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News July 7, 2025
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை!

வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று (ஜூலை 6) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில் 100 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், இது தொடர்பாக 4 பேர் மீது மதுவிலக்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் எச்சரித்துள்ளார்.