News March 4, 2025
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: ஆட்சியர் தகவல்

புதுகை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு தொழில் நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 8ஆம் தேதி மன்னர் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. இமுகாமில் 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. இதில் 8ஆம் வகுப்பு முதல் பட்டைய படிப்பு வரை படித்துள்ளவர்கள் பங்கு பெறலாம் என மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.
Similar News
News November 7, 2025
புதுக்கோட்டை: வங்கி கணக்கை பாதுகாக்க இது முக்கியம்!

உங்க வங்கி மறு KYC தேவை என உங்களுக்கு அறிவித்ததா? அப்போ, உங்கள் வங்கி கணக்கை முடக்காமல், செயல்பாட்டில் வைத்திருக்க உங்கள் KYC-ஐ புதுப்பிக்கவும்.
KYC எப்படி புதுப்பிப்பது:
1.உங்கள் அருகிலுள்ள வங்கி கிளைக்கோ / கிராம பஞ்சாயத்து முகாமிற்கோ செல்லவும்.
2.ஆதார், வோட்டர் ஐடி, 100நாள் வேலை அட்டை கொண்டு செல்லவும்.
3.விவரங்களில் எந்தவிதமான மாற்றமும் இல்லையெனில் சுய அறிக்கை (Self-declaration) போதும். SHARE IT
News November 7, 2025
புதுகை: நெல் மூட்டைகள் அனுப்பும் பணி

திருவாரூர் மாவட்டத்திலிருந்து புதுகைக்கு சரக்கு ரயில் மூலம் 42 பெட்டிகளில் வந்த 2 ஆயிரம் மெட்ரிக்டன் நெல் மூட்டைகளை லாரிகள் மூலம் கடையாத்துப்பட்டி மற்றும் துளையானூர் பகுதிகளில் உள்ள அரசு சேமிப்பு கிடங்கிற்கு அனுப்பும் பணி நேற்று நடைபெற்றது. டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி முடிந்து நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை நுகர் பொருள் வாணிபக்கழகத்தின் கிடங்கிற்கு அனுப்பபடுகிறது.
News November 7, 2025
புதுகை: திருமணத்திற்கு தங்கம் வேண்டுமா?

புதுகை மாவட்ட மக்களே! ஆதரவற்ற பெண்களுக்கு தமிழக அரசின் ‘அன்னை தெரசா நினைவு திருமண உதவி’ திட்டத்தின் கீழ் ரூ.25,000, 8 கிராம் தங்கம் வழங்கப்படுகிறது. 2) இதற்கு உங்கள் மாவட்ட, பகுதி சமூக நல அலுவலரை அணுக வேண்டும். 3) திருமணத்திற்கு 40 நாட்களுக்கு முன்னரே விண்ணப்பிக்க வேண்டும். 4) திருமணத்திற்கு பிறகு அளிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!


