News March 4, 2025
நீலகிரி: நடுரோட்டில் தீ பற்றி எரிந்து கார்

ஊட்டியில் இருந்து குன்னூர் நோக்கி ராஜா என்பவர் தனது குடும்பத்தினருடன் காரில் சென்று கொண்டு இருந்தார். இந்த நிலையில் கேத்தி அருகே வேலி வியூ பகுதியில் சென்றபோது காரில் இருந்து புகை வந்தது. உடனே சுதாரித்து கொண்ட ராஜா குடும்பத்துடன் கீழே இறங்கி, தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். அதற்குள் கார் முழுவதும் எரிந்து கருகியது.
Similar News
News December 26, 2025
JUSTIN: கூடலூரில் பெண் யானை உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம் கூடலூர் வனப்பகுதியில் தேவர்சோலை எஸ்டேட் சதுப்பு நிலப்பகுதியில் சுமார் நான்கு வயது மதிக்கத்தக்க யானை ஒன்று நேற்று சென்றுள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக அங்குள்ள உள்ள சேற்றில் சிக்கி அந்த யானை பரிதாபமாக உயிரிழந்தது. இதனை அடுத்து வன கால்நடை மருத்துவரால் இன்று உடற்கூறு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பின்னர் வனப்பகுதியில் யாயை புதைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
News December 26, 2025
நீலகிரி: இழந்த பணத்தை திரும்ப பெற வேண்டுமா?

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!
News December 26, 2025
நீலகிரி வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் மேற்கொள்ள, மாறுதல் செய்ய சிறப்பு முகாம்கள் மேற்கொள்ள, தலைமைத் தேர்தல் அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் வாக்காளர் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம்கள் டிச.27,28 ஆகிய தேதிகளிலும், 2026 ஜன.03, 04 ஆகிய தேதிகளிலும் நடைபெறவுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்துக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.


