News March 4, 2025
கிட்னியில் கல் எப்படி உருவாகிறது தெரியுமா?

சிறுநீரில் உள்ள சில ரசாயனங்கள் வெளியே செல்வதற்குப் பதிலாக உடலில் தங்கி, அவை படிமங்களாக மாறி பின்னர் கற்களாக மாறுகின்றன. மேலும், அசைவம் அதிகமாக சாப்பிட்டு தண்ணீர் குடிக்காமல் இருப்பது போன்ற காரணத்தினாலும் கல் உண்டாகலாம். அத்துடன் தூக்கமின்மை, லேட்டாக சாப்பிடுவது, வைட்டமின் B6, C, D குறைபாடுகளுடன் உடல் பருமன் இருப்பவர்களுக்கும் கிட்னியில் கல் ஏற்படுகிறது. அதிகமாக தண்ணீர் குடியுங்கள்!
Similar News
News March 4, 2025
புதிய சாதனைக்கு ரெடியாகும் விராட் கோலி!

ரன் மெஷின் என அழைக்கப்படும் விராட் கோலி, ஏராளமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார். தற்போது மேலும் ஒரு சாதனை படைக்க அவர் காத்திருக்கிறார். இன்றைய போட்டியில் 40 ரன்கள் எடுத்தால் சாம்பியன்ஸ் டிராபியில் அதிக ரன் குவித்த இந்தியர் என்ற சாதனை கோலி வசமாகும். இதுவரை 16 போட்டிகளில் 662 ரன்கள் குவித்துள்ளார் விராட். பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் தவான் 10 போட்டிகளில் 701 ரன்கள் குவித்திருக்கிறார்.
News March 4, 2025
முதல் விக்கெட் எடுத்த ஷமி!

ஷமி இந்திய அணிக்கு முதல் விக்கெட்டை எடுத்துக் கொடுத்துள்ளார். ஆஸி. ஓப்பனர் கூப்பர் கோனொல்லியின்(0) விக்கெட்டை அவர் வீழ்த்தியுள்ளார். ஆஸி. அணி 3 ஓவர்களில் 4-1 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் ஹெட் 1 ரன்னுடன் இருக்கிறார். ஸ்டீவ் ஸ்மித் வந்துள்ளார்.
News March 4, 2025
பாஜக – அதிமுக கூட்டணியா? பின்னணி என்ன?

நேற்று வேலுமணி மகன் திருமணத்திற்கு சென்ற அண்ணாமலையுடன் அதிமுக மூத்த தலைவர்கள் நெருக்கம் காட்டினர். அதேபோல், வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட தலைவர்களும் பாஜக உடன் கூட்டணி வைக்க விரும்பிய போதும், EPS விடாப்பிடியாக இருந்தார். இதற்கிடையில் தவெக உடன் கூட்டணி அமைக்கலாம் என கூறப்பட்ட நிலையில், கூட்டணி இல்லை என பிகே கூறிவிட்டார். இதனால், மீண்டும் பாஜக உடன் செல்ல இபிஎஸ் திட்டமிட்டுள்ளாரா என கேள்வி எழுந்துள்ளது.