News March 4, 2025
பஸ் மீது லாரி மோதியதில் 31 பேர் பலி

பொலிவியா நாட்டின் லா பாஸ் அருகே, பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 31 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லாரி மோதிய வேகத்தில், சுமார் 500 மீட்டர் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது. இதில், படுகாயமடைந்த 22 பேர் ஹாஸ்பிட்டலில் உள்ளனர். இந்த கோர விபத்திற்கு காரணமான லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் பொலிவியாவின் சுக்ரேவில் இரு பஸ்கள் மோதிக்கொண்ட விபத்தில் 37 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 4, 2025
முதல் விக்கெட் எடுத்த ஷமி!

ஷமி இந்திய அணிக்கு முதல் விக்கெட்டை எடுத்துக் கொடுத்துள்ளார். ஆஸி. ஓப்பனர் கூப்பர் கோனொல்லியின்(0) விக்கெட்டை அவர் வீழ்த்தியுள்ளார். ஆஸி. அணி 3 ஓவர்களில் 4-1 ரன்கள் எடுத்துள்ளது. களத்தில் ஹெட் 1 ரன்னுடன் இருக்கிறார். ஸ்டீவ் ஸ்மித் வந்துள்ளார்.
News March 4, 2025
பாஜக – அதிமுக கூட்டணியா? பின்னணி என்ன?

நேற்று வேலுமணி மகன் திருமணத்திற்கு சென்ற அண்ணாமலையுடன் அதிமுக மூத்த தலைவர்கள் நெருக்கம் காட்டினர். அதேபோல், வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட தலைவர்களும் பாஜக உடன் கூட்டணி வைக்க விரும்பிய போதும், EPS விடாப்பிடியாக இருந்தார். இதற்கிடையில் தவெக உடன் கூட்டணி அமைக்கலாம் என கூறப்பட்ட நிலையில், கூட்டணி இல்லை என பிகே கூறிவிட்டார். இதனால், மீண்டும் பாஜக உடன் செல்ல இபிஎஸ் திட்டமிட்டுள்ளாரா என கேள்வி எழுந்துள்ளது.
News March 4, 2025
மேட்சுக்கு முன்பே ரோஹித்தின் மோசமான ரெக்கார்ட்

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் இன்றும் டாஸில் தோற்று மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார். ODIல் தொடர்ந்து 11 டாஸ்களை அவர் இழந்துள்ளார். இதன் மூலம், தொடர்ந்து ODI டாஸில் தோற்ற கேப்டன்கள் பட்டியலில் 2வது இடத்தில் ரோஹித் இருக்கிறார். முதல் இடத்தில் மேற்கு இந்திய தீவுகளின் பிரையன் லாரா(12) இருக்கிறார். அதே நேரத்தில் இந்திய அணி, தொடர்ந்து 14 ODIல் டாஸை தோற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.