News March 4, 2025
விஜய்யை விமர்சிக்க திமுகவில் திடீர் தடை: இதுவா காரணம்?

சட்டசபைத் தேர்தலுக்கான பணிகளை DMK தற்போதே தொடங்கிவிட்டது. அந்தவகையில், அண்மையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், விஜய்யைப் பற்றி யாரும் விமர்சனம் செய்ய வேண்டாமென அமைச்சர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விசாரித்தபோது, அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்து அரசியலில் முக்கியத்துவம் பெற வைத்தது போன்ற நிலையை, விஜய்க்கும் ஏற்படுத்தி விடக்கூடாது என்பதால் இம்முடிவு எடுக்கப்பட்டதாக DMK வட்டாரங்கள் கூறுகின்றன.
Similar News
News October 25, 2025
மதுபிரியர்களுக்கு ஷாக்: இங்கு 3 நாள்கள் டாஸ்மாக் விடுமுறை

முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையையொட்டி, ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 நாள்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அக்.28, 29,30 ஆகிய தேதிகளில் அம்மாவட்டத்திலுள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மதுரை, சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களிலும், டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
News October 25, 2025
அன்புமணி OUT, ஸ்ரீகாந்தி IN.. ராமதாஸ் அதிரடி ஆக்ஷன்

பாமகவின் செயல் தலைவராக ஸ்ரீகாந்தி செயல்படுவார் என ராமதாஸ் அறிவித்துள்ளார். தருமபுரியில் நடைபெற்ற கட்சியின் கூட்டத்தில் பேசிய அவர், கட்சிக்கும் தனக்கும் ஸ்ரீகாந்தி பாதுகாப்பாக இருப்பார் என்றார். பாமக இளைஞரணி செயலாளராக தமிழ்க்குமரன் சிறப்பாக செயல்படுவார் என தெரிவித்தார். முன்னதாக செயல் தலைவர் பதவியிலிருந்து அன்புமணியை நீக்கிய ராமதாஸ், அன்புமணி கட்சிக்காக எதுவும் செய்யவில்லை என குற்றம்சாட்டினார்.
News October 25, 2025
சீனா அதிபருடன் நிறைய பேச வேண்டியுள்ளது: டிரம்ப்

அமெரிக்கா மற்றும் சீனா இடையே கடந்த சில மாதங்களாக வர்த்தக பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், தென்கொரிய உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக செல்லும் டிரம்ப், அங்கு சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்து பேச உள்ளார். சீன அதிபருடன் பேச நிறைய விஷயங்கள் உள்ளதாக தெரிவித்துள்ள அவர், இந்த சந்திப்பின் போது தைவான் பற்றி பேசுவேன் என்றும், இது ஒரு நல்ல சந்திப்பாக நடக்கும் என நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


