News March 4, 2025
உக்ரைனுக்கான ராணுவ உதவியை நிறுத்திய டிரம்ப்

உக்ரைனுக்கான ராணுவ உதவியை அமெரிக்கா நேற்று முதல் நிறுத்தியுள்ளது. ரஷ்யாவுடனான அமைதிப்பேச்சு வார்த்தைக்கு உக்ரைனை சம்மதிக்க வைக்கவும், 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் போரை நிறுத்தவும் இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒத்துக்கொள்ளாமல் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியால் நீண்ட காலம் செயல்பட முடியாது எனவும் டிரம்ப் எச்சரித்துள்ளார்.
Similar News
News March 4, 2025
அதிமுக கூட்டணி நிலைப்பாட்டில் மாற்றம்

பாஜகவுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு 6 மாதங்கள் கழித்து முடிவெடுப்போம் என இபிஎஸ் கூறியுள்ளார். இது தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. கடந்த சில மாதங்களாக பாஜகவுடன் கூட்டணியே இல்லை என அழுத்தமாக பேசி வந்த அவர், தனது நிலைப்பாட்டை திடீரென மாற்றியுள்ளார். சேலத்தில் பேசிய அவர் DMK மட்டுமே தங்கள் எதிரி எனவும் தேர்தல் நெருங்கும் போதுதான் யார் யார் உடன் இருப்பார்கள் எனத் தெரியும் என்றார்.
News March 4, 2025
CT அரையிறுதி: இந்தியா பந்துவீச்சு!

இந்திய அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா டாஸை வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இப்போட்டியில் யார் ஜெயிக்க போறாங்க? கமெண்ட் பண்ணுங்க. Stay tuned with Way2News for match updates.
News March 4, 2025
நம் உயிரினும் மேலானது கல்வியே: CM ஸ்டாலின்

நெல்லை வள்ளியூரில் இதயநோயால் தாயார் இறந்த நிலையில், சோகத்தை தாங்கி மாணவர் சுனில்குமார் +2 தேர்வெழுதச் சென்றார். இச்சம்பவத்தையும், மாற்றுத்திறனாளி மாணவர்கள் தேர்வெழுதியதையும் சுட்டிக்காட்டி CM ஸ்டாலின் நெகிழ்ந்துள்ளார். இதுகுறித்து அவர் X பக்கத்தில், இதுதான் தமிழ்ச் சமூகம், கல்விதான் நம் உயிரினும் மேலானது, பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைவித்தாலும் சங்காரம் நிசமெனச் சங்கே முழங்கு என பதிவிட்டுள்ளார்.