News March 4, 2025

திருப்பத்துார்: நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிப்பு

image

தர்மபுரியை சேர்ந்த சூசையம்மாள் (35) என்பவர் வீட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பி வைக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார்.இதில் நளினி (32) என்பவர் வேலைக்கு சேர்ந்தார்.திருப்பத்துார் மாதேஸ்வரன் என்பவர் வீட்டுக்கு வேலைக்கு சென்ற நிலையில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டது.மாதேஸ்வரன் நிர்வாணமாக இருக்கும்போது, நளினி மொபைலில் வீடியோ எடுத்து ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளார்.புகாரின் அடிப்படையில் நளினி கைது.

Similar News

News September 16, 2025

திருப்பத்தூர்: தலைகுப்புற கவிழ்ந்து பிக்கப் வாகனம் விபத்து

image

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பச்சூர் கூட்ரோடு டோல்கேட் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று (செப்.15) டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த பிக்கப் வாகனம் தாறுமாறாக சென்று தடுப்புச் சுவர் மீது மோதி கோர விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக டிரைவர் உயிர் தப்பினார். நாட்றம்பள்ளி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

News September 16, 2025

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

image

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று செப்-15 தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ” போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வரவேண்டும், தொடர்ந்து 29 நாட்களாக போராட்டம் செய்யும் ஊழியர்களை நேரில் சந்தித்து பேச வேண்டும்” என கோஷங்கள் எழுப்பினர்.

News September 15, 2025

திருப்பத்தூர் மாவட்ட இரவு ரோந்து பணி விபரம்

image

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி, வாணியம்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று (செ.14) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசா விவரங்களை மாவட்ட காவல்துறையினர் தொலைபேசி எண்ணுடன் அறிவித்துள்ளனர். இரவு நேரங்களில் நடக்கும் அசம்பாவிதங்கள் மற்றும் குற்றங்கள் குறித்து பொது மக்கள் மேற்கண்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம்.

error: Content is protected !!