News March 4, 2025

அரியலூரில் மனு அளித்த மறுநிமிடமே உதவிய ஆட்சியர்

image

அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமியிடம் உடையார்பாளையம் வட்டம், தா.பழூர், சீனிவாசபுரத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்ற முதியவர் தனக்கு இரு காதுகளும் கேட்காது எனவும், தனக்கு தமிழக அரசு வழங்கும் இலவச காது கேட்கும் கருவியினை வழங்கி உதவுமாறு மனு அளித்தார். இதனையடுத்து மறுநிமிடமே ஆட்சியர் மாற்றுத்திறனாளி நல துறையினர் மூலம் முதியவருக்கு காது கேட்கும் கருவிகளை வழங்கினார்.

Similar News

News January 2, 2026

அரியலூர்: பொங்கல் பரிசு… முக்கிய அறிவிப்பு!

image

தமிழக அரசால் ஆண்டுதோறும் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. அப்படி உங்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் தரமில்லாமலோ அல்லது சரியாக வந்து சேரவில்லை என்றால் ‘1800 425 5901’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு அலைச்சல் இல்லாமல் உங்களால் புகாரை அளிக்க முடியும். மேலும் இந்த எண்ணின் மூலமாக ரேஷன் கடை மற்றும் ரேஷன் பொருட்கள் குறித்தும் நீங்கள் புகார் அளிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News January 2, 2026

‘அரியலூர்’ பெயர் எப்படி வந்தது தெரியுமா?

image

‘ஹரியலூர்’ என்பதே காலப்போக்கில் ‘அரியலூர்’ என மாறியதாக கூறப்படுகிறது. அரி+இல்+ஊர் = அரியலூர்; அரி-விஷ்ணு, இல் உறைவிடம், ஊர்-பகுதி; பகவான் விஷ்ணு உறைவிடம் கொண்ட பகுதி என்பது இதன் பொருள். விஷ்ணு கோயில்கள் அதிகமாக உள்ளதாலும் இப்பெயர் வந்திருக்கலாம். மேலும், ‘அரியல்’ என்ற ஒருவகை பானத்தாலும் இப்பெயர் என சொல்லப்படுகிறது. இதுபோல உங்க ஊர பற்றி உங்களுக்கு வேறு பெயர்க்காரணம் தெரியுமா COMMENT பண்ணுங்க.

News January 2, 2026

அரியலூர்: கடத்தல் திட்டம் போட்ட 5 பேர் கைது

image

கீழப்பழுவூர் காவல் துறையினர் வாரணவாசி மருதையாறு பாலம் அருகே சோதனை மேற்கொண்டனர். அப்போது, கார் ஒன்றில் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் 5 பேரை பிடித்தனர். இதுகுறித்து போலீசார், அவர்களிடம் விசாரணை செய்ததில், அவர்கள் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரை கடத்தி, பணம் பறிக்க திட்டமிட்டு காரில் ஆயுதங்களுடன் சென்றது தெரிய வந்துள்ளது. இதையடுத்து போலீசார், அனைவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

error: Content is protected !!