News March 4, 2025
இவரா அந்த பாலியல் குற்றவாளி?

மகாராஷ்டிராவில் பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ரக்ஷாவின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது, சிவசேனா கட்சி (ஷிண்டே) நிர்வாகி பியூஷ் எனத் தெரியவந்துள்ளது. இவரது தலைமையிலான குழுவே, அந்த சிறுமியை பின் தொடர்ந்து சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளது. பியூஷ் முன்னதாக பாஜக நிர்வாகியாகவும் இருந்துள்ளார். இந்த விவகாரத்தில் மொத்தம் 7 பேர் மீது போக்சோ பாய்ந்துள்ளது.
Similar News
News March 4, 2025
20 மனைவிகள், 104 பிள்ளைகள், 144 பேரக்குழந்தைகளா!

இந்த அதிசய மனிதர் டான்ஸானியாவில் வசித்து வருகிறார். 1961ல் முதல் திருமணம் செய்தவரின் பழங்குடியினத்தில் அடுத்தடுத்த திருமணங்களுக்கு தடையில்லை என்பதால், 20 பெண்களை அவர் மணமுடித்துள்ளார். அனைத்து மனைவிகளுடனும் அவர் ஒரே வீட்டில்தான் வாழ்கிறார். 104 வாரிசுகளின் மூலம் அவருக்கு 144 பேரன், பேத்திகளும் துள்ளி விளையாடுகிறார்கள். இந்த குடும்பமே ஒரு கிராமம் போல, அதன் ராஜாவாக கபிங்கா வாழ்கிறார்.
News March 4, 2025
அமெரிக்கா விதித்த 25% வரி முறை அமலுக்கு வந்தது

கனடா, மெக்சிகோ நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த 25% வரி அமலுக்கு வந்துள்ளது. அத்துடன், சீனப் பொருட்கள் மீதான 10% வரி விதிப்பும் நடைமுறைக்கு வந்துள்ளது. அமெரிக்க பொருளாதாரத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கையாகவும், அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக அகதிகள், போதைப்பொருள் நுழைவதை தடுக்கவும் இந்த கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளதாக அதிபர் டிரம்ப் விளக்கமளித்திருந்தார்.
News March 4, 2025
உடல் பருமனால் இத்தனை சிக்கலா?

உடல் பருமன் உலகளவில் பெரும் தலைவலியாக பலருக்கு உள்ளது. ஆய்வின்படி, இன்றைய காலகட்டத்தில் குழந்தைகளில் 5ல் ஒன்று இதனால் பாதிக்கப்படுகிறது. அதேபோல், பெரியவர்களில் 3ல் ஒருவருக்கு பாதிப்பு உள்ளது. உடல் பருமனால் சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, இதய நோய் உள்ளிட்ட பல பிரச்னைகள் மனிதனுக்கு ஏற்படுகின்றன. தினசரி உடற்பயிற்சி செய்வது, துரித உணவுகளை தவிர்ப்பது இதனை குறைக்க உதவும் என சொல்லப்படுகிறது.