News March 4, 2025
IND vs AUS போட்டிக்கு புது மைதானம்

CT தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் IND vs AUS அணிகள் இன்று மோதுகின்றன. இந்த தொடரில் இதுவரை நடந்த அனைத்து போட்டிகளையும், IND அணி ஒரே மைதானத்தில் விளையாடியது, மற்ற அணிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இன்றைய போட்டி புது மைதானத்தில் நடக்க உள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மேத்திவ் சாண்ட்ரி மேற்பார்வையில், எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியம் இந்த மைதானத்தை தயார் செய்துள்ளது.
Similar News
News March 4, 2025
அப்பல்லோ ஹாஸ்பிட்டல் விரைந்த மு.க.அழகிரி

மூச்சுத் திணறல் காரணமாக சென்னை அப்பல்லோ ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டுள்ள தாயார் தயாளு அம்மாளை நேரில் சந்தித்த மு.க.அழகிரி, உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். நேற்று இரவு தயாளு அம்மாள் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்ததும் மதுரையிலிருந்து விரைந்த அவர், டாக்டர்களிடம் தாயாரின் உடல்நிலை, சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.
News March 4, 2025
தொடர் சரிவில் இந்திய பங்குச் சந்தைகள்

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறுவதால் இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. இன்று காலையில் நிஃப்டி 62.10 புள்ளிகள் சரிந்து 22,057.20 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. சென்செக்ஸ் 191 புள்ளிகள் சரிந்து 72,894.23 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. பங்குச் சந்தை சரிவால் முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
News March 4, 2025
போராட்டத்தை தள்ளிப்போடும் ஜாக்டோ – ஜியோ

தேர்வு நேரம் என்பதால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை ஜூன் மாதத்திற்கு தள்ளிப்போட திட்டமிட்டுள்ளனர். பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் சமீபத்தில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அடுத்தக்கட்ட போராட்டத்தை, இம்மாதம் நடத்த திட்டமிட்டிருந்தனர். எனினும், அமைச்சர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டதால், மாற்றப்பட்டுள்ளது.