News March 4, 2025
இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

அபுதாபியில் உ.பி. பெண் ஷாஜாதி கானுக்கு (33) மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 2022ல் இவரது பராமரிப்பில் இருந்த 4 மாதக் குழந்தை உயிரிழந்த விவகாரத்தில், அவருக்கு மரண தண்டணை விதிக்கப்பட்டது. இதுகுறித்து அப்பெண்ணின் தந்தை டெல்லி ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், கடந்த பிப்.15ல் தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும், நாளை இறுதி சடங்கு நடைபெற உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Similar News
News March 4, 2025
பாஜகவின் திணிப்புகளை தமிழகம் ஏற்காது: கனிமொழி

கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தமிழ் பயிற்றுவிக்கப்படுகிறது என்ற தரவுகளை அண்ணாமலை தர முடியுமா? என MP கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்திலுள்ள KV பள்ளிகளில் தமிழ் ஆசிரியர்கள் இல்லை என்பது அண்ணாமலைக்கு தெரியாதா என வினவிய அவர், தமிழக மாணவர்கள் மீது அக்கறையுள்ள பாஜக அரசு கல்வி நிதியை ஏன் நிறுத்தி என்றும் சாடினார். மேலும், பாஜகவின் அவதூறுகள், திணிப்புகளை தமிழகம் ஒருபோதும் ஏற்காது என்றார்.
News March 4, 2025
அப்பல்லோ ஹாஸ்பிட்டல் விரைந்த மு.க.அழகிரி

மூச்சுத் திணறல் காரணமாக சென்னை அப்பல்லோ ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டுள்ள தாயார் தயாளு அம்மாளை நேரில் சந்தித்த மு.க.அழகிரி, உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். நேற்று இரவு தயாளு அம்மாள் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்ட தகவல் அறிந்ததும் மதுரையிலிருந்து விரைந்த அவர், டாக்டர்களிடம் தாயாரின் உடல்நிலை, சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.
News March 4, 2025
தொடர் சரிவில் இந்திய பங்குச் சந்தைகள்

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வெளியேறுவதால் இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. இன்று காலையில் நிஃப்டி 62.10 புள்ளிகள் சரிந்து 22,057.20 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. சென்செக்ஸ் 191 புள்ளிகள் சரிந்து 72,894.23 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. பங்குச் சந்தை சரிவால் முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.