News March 30, 2024
நீரில் மூழ்கி 4 பெண்கள் பலி

வேலூர் குடியாத்தம் அருகே நீரில் மூழ்கி 4 பெண்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேப்பூர் கிராமத்தைச் சேர்ந்த சரோஜா, அவரது மகள் லலிதா உள்பட 4 பேர் முனீஸ்வரன் கோயிலுக்கு சென்றனர். சாமி தரிசனத்தை முடித்துவிட்டு அருகிலிருந்த ஏரியில் குளித்தபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். சம்பவத்தை அடுத்து 4 பேரின் சடலங்களையும் கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 31, 2025
உலக பேரழிவை ஏற்படுத்திய இந்த நாளை மறக்க முடியுமா?

சரியாக 6 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் (2019 டிச.31) சீனாவின் வுகான் மாகாணத்தில் மருத்துவ அவசரநிலை அறிவிக்கப்பட்டது. அடையாளம் காணப்படாத நிமோனியா தொற்றால் மக்கள் அதிகளவில் அட்மிட் ஆவதாக தெரிவிக்கப்பட்டது. அடுத்த சில தினங்களில் கடல்கள், மலைகள், நாடுகளை தாண்டி அந்த தொற்று பரவியது. கோவிட்-19 என பெயர் பரிமாற்றம் பெற்று, உலகம் முழுவதும் எண்ணிலடங்கா உயிர்களை பறித்தது. #Remembering Disaster.
News December 31, 2025
அரசியல் பேசும் ‘ஜனநாயகன்’

விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ அரசியல் படமா என்ற கேள்விக்கு, இயக்குநர் H வினோத் சூப்பர் அப்டேட் கொடுத்துள்ளார். கமர்ஷியல் படமாக இருந்தாலும் படத்தில் அரசியல் சார்ந்த பல அம்சங்களை வினோத் அதில் சேர்த்துள்ளாராம். அரசியல் கருத்துகளை படத்தில் வைக்க தயாரிப்பாளர் உறுதுணையாக இருந்ததாகவும், அவரே பல அரசியல் நிகழ்வுகளை சேர்க்க ஐடியாவும் கொடுத்துள்ளதாக பேட்டி ஒன்றில் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
News December 31, 2025
BREAKING: கூட்டணி.. EPS முடிவை மாற்றினார்

அதிமுக – பாஜக கூட்டணி மீது கிராமப்புற மக்கள் அதிருப்தியில் உள்ளதாக மா.செ கூட்டத்தில் EPS பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் SIR பணிகளில் அதிமுகவினர் சரியாக ஈடுபடவில்லை என பேசியுள்ள அவர், மக்கள் & களப் பணியில் முழுமையாக ஈடுபடவும் உத்தரவிட்டுள்ளார். மேலும், இனி கூட்டணி பற்றி தான் பார்த்துக்கொள்வதாக கூறிய அவர், மற்றவர்கள் யாரும் தலையிட வேண்டாம் எனவும் முடிவை மாற்றிக்கொண்டார் என கூறப்படுகிறது.


