News March 3, 2025
நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயிலில் எல்.எச்.பி. பெட்டிகள் இணைப்பு!

சேலம் வழியாக இயக்கப்படும் சென்னை சென்ட்ரல்- மேட்டுப்பாளையம் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் (12671), மேட்டுப்பாளையம்-சென்னை சென்ட்ரல் நீலகிரி எக்ஸ்பிரஸ் ரயில் (12672) ஆகிய ரயில்களில் ஜெர்மன் தொழில்நுட்பத்துடன் கூடிய எல்.எச்.பி. பெட்டிகள் இணைப்பட்டுள்ளன. இந்த புதிய நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது என்று சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.
Similar News
News September 13, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு!

சேலம் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 13, 2025
சேலம் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தல்!

சேலம் மாவட்டத்தில் சாலை விபத்துக்களைக் குறைக்கும் வகையில் சேலம் மாவட்ட காவல்துறை பல்வேறு தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், போக்குவரத்து சாலை விதிகளையும், டிராபிக் சிக்னல்களையும் வாகன ஓட்டிகள் மதிக்க வேண்டும் என்றும், பாதுகாப்பான பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
News September 13, 2025
சேலத்தில் அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம்!

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேலம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதையொட்டி வருகை மற்றும் அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் இன்று (செப்.12) அமைச்சர் ராஜேந்திரன் தலைமையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. ஆட்சியர் டாக்டர்.பிருந்தாதேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.