News March 3, 2025
சிவகங்கை மாவட்டத்தில் +2 தேர்விற்கு 15,894 வருகை

தமிழகம் முழுவதும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு அரசு பொதுத் தேர்வு சிறப்பாக தொடங்கியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் மேல்நிலை இரண்டாமாண்டு அரசு பொது தேர்வினை மொத்தம் 16,063 மாணவ, மாணவியர்கள் எழுதும் நிலையில் இன்று நடைபெற்ற தேர்வில் 7,157 மாணவர்கள், 8,737 மாணவிகளும் என மொத்தம் 15,894 மாணவ, மாணவியர்கள் வருகை புரிந்து தேர்வு எழுதியுள்ளனர். மேலும் 164 மாணவ, மாணவியர்கள் தேர்வு எழுத வருகை புரியவில்லை.
Similar News
News August 19, 2025
வேளாண்மை விழிப்புணர்வு கருத்தரங்கம்

காரைக்குடி அருகே அமராவதி புதூரில் உள்ள கிராமிய பயிற்சி மையத்தில் இன்று (ஆக.19) காலை 10:30 மணி அளவில் உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற உள்ளது. சிவகங்கை மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தலைமையில் கூட்டுறவு துறை அமைச்சர் K.R.பெரியகருப்பன் கருத்தரங்கு பேருரையாற்ற உள்ளார். இக்கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ளுமாறு மாவட்ட வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது.
News August 18, 2025
சிவகங்கை: ரோந்து காவல் அதிகாரிகள் தொடர்பு எண்கள்

சிவகங்கை மாவட்டத்தில் முக்கிய நகரங்களில் (18.08.25) இன்று இரவு 10 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட
காவல் அதிகாரிகள் தொடர்பு எண்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர காலத்திற்கு அவர்களை அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்து தங்கள் புகார் பதிவு செய்யலாம் என சிவகங்கை மாவட்டக் காவல் துறை அறிவித்துள்ளது.
News August 18, 2025
சிவகங்கை: டிகிரி இருந்தால் LIC-யில் வேலை ரெடி!

சிவகங்கை இளைஞர்களே, மத்திய அரசின் LIC நிறுவனத்தில் உதவி நிர்வாக அலுவலர்கள், உதவி பொறியாளர் ஆகிய பணியிடங்களுக்கு 841 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் ரூ.88,635 முதல் ரூ.1,69,025 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க <