News March 3, 2025
தோல்வி தான் காங்கிரஸை ஈர்க்கும்.. விளாசும் நெட்டிசன்கள்

ரோஹித் குண்டாக இருக்கிறார் என கூறி <<15635681>>காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர்<<>> சர்ச்சையை கிளப்பி இருக்கிறார். இது குறித்த BJPயின் செய்தித் தொடர்பாளரின் பதிவில், டெல்லியில் 90 தேர்தல் சீட் இழப்பது தான் காங்கிரசுக்கு ஈர்ப்பானது என விமர்சித்தார். நெட்டிசன்களும், தொடர் தோல்வி பெறும் காங்கிரசுக்கு, வெற்றி பெறும் கேப்டன் Unimpressive தான் என விமர்சிக்கின்றனர். இது குறித்து நீங்க என்ன சொல்றீங்க?
Similar News
News March 4, 2025
IND vs AUS போட்டிக்கு புது மைதானம்

CT தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் IND vs AUS அணிகள் இன்று மோதுகின்றன. இந்த தொடரில் இதுவரை நடந்த அனைத்து போட்டிகளையும், IND அணி ஒரே மைதானத்தில் விளையாடியது, மற்ற அணிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இன்றைய போட்டி புது மைதானத்தில் நடக்க உள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மேத்திவ் சாண்ட்ரி மேற்பார்வையில், எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியம் இந்த மைதானத்தை தயார் செய்துள்ளது.
News March 4, 2025
இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

அபுதாபியில் உ.பி. பெண் ஷாஜாதி கானுக்கு (33) மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 2022ல் இவரது பராமரிப்பில் இருந்த 4 மாதக் குழந்தை உயிரிழந்த விவகாரத்தில், அவருக்கு மரண தண்டணை விதிக்கப்பட்டது. இதுகுறித்து அப்பெண்ணின் தந்தை டெல்லி ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், கடந்த பிப்.15ல் தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும், நாளை இறுதி சடங்கு நடைபெற உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
News March 4, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: பயனில சொல்லாமை ▶குறள் எண்: 196 ▶குறள்: பயனில்சொல் பராட்டு வானை மகன்எனல் மக்கட் பதடி யெனல். ▶பொருள்: பயனற்றவைகளைச் சொல்லிப் பயன்பெற நினைப்பவனை, மனிதன் என்பதைவிட அவன் ஒரு பதர் என்பதே பொருத்தமானதாகும்.