News March 3, 2025
யூடியூப் பார்த்து கொலை.. பலே இளைஞர் சிக்கியது எப்படி?

20 ஏக்கர் நிலத்திற்காக யூடியூப் பார்த்து பங்காளியை தீர்த்துக்கட்டிய பலே இளைஞர் 3 மாதங்களுக்கு பிறகு சிக்கியுள்ளார். கிருஷ்ணகிரி அருகே உள்ள ஜம்புகுட்டப்பட்டியை சேர்ந்த சக்திவேல், 3 மாதங்களுக்கு முன்பு மர்மமான முறையில் இறந்தார். இந்த வழக்கில் போலீசார் துப்பு கிடைக்காமல் திணறி வந்த நிலையில், உறவினர் சபரி, யூடியூப் பார்த்து 6 மாதங்களாக திட்டமிட்டு இந்த கொலையை அரங்கேற்றியது அம்பலமாகியுள்ளது.
Similar News
News March 4, 2025
கமிட்மென்ட் இருந்ததால் வர முடியவில்லை: லைலா

ஏற்கனவே ஒப்புக்கொண்ட தெலுங்கு படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள வேண்டியிருந்ததால், ‘பாலா 25’ நிகழ்விற்கு வர முடியவில்லை என நடிகை லைலா விளக்கம் அளித்துள்ளார். ரசிகர்கள் தன்னை மறக்காமல் இருப்பதற்கு பாலா இயக்கிய ‘பிதாமகன்’ படம் தான் காரணம் எனவும், அப்படத்தில் தான் பேசிய வசனத்தை ரசிகர்கள் இன்றும் மீம்சாக பயன்படுத்தி வருவது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
News March 4, 2025
டிரம்ப் அவமானப்படுத்திய பிறகும் ஜெலன்ஸ்கி உறுதி

டிரம்ப் நிர்வாகத்துடன் சுமூகமான உறவை பேண முடியும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நம்பிக்கை தெரிவித்துள்ளார். USA எதிர்பார்க்கும் கனிமவள ஒப்பந்தத்தில் கையெழுத்திட தயாராக இருப்பதாகவும், ஆனால் ரஷ்யா ஆக்கிரமித்த பகுதிகளை அந்நாட்டு வழங்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், தற்போதைய சூழலில் தேர்தலை நடத்துவது கடினம் என்பதால், தன்னை பதவியில் இருந்து நீக்குவதும் கடினம்தான் என்றும் தெரிவித்துள்ளார்.
News March 4, 2025
இன்றைய (மார்ச்.04) நல்ல நேரம்

▶மார்ச்- 04 ▶மாசி – 20 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 08:30 AM – 09:00 AM & 04:30 PM – 05:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 07:30 PM – 08:30 PM ▶ராகு காலம்: 03:00 PM – 04:30 PM ▶எமகண்டம்: 09:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM- 01:30 PM ▶திதி: பஞ்சமி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶சந்திராஷ்டமம்: அஸ்தம் ▶நட்சத்திரம் : அசுவினி.