News March 3, 2025
அதிமுக அறிவித்த பம்பர் பரிசு!

அதிமுகவின் கூட்டத்திற்கு வருவோருக்கு குலுக்கல் முறையில் தங்க நாணயம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊத்துக்குளியில் வரும் 5ஆம் தேதி மாலை ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா கூட்டத்திற்கு வருவோரில் 3 பேருக்கு தங்கம், 300 பேருக்கு மிக்சி, குக்கர், ஃபேன் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் இந்த அறிவிப்பை எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடி வருகின்றனர். உங்கள் கருத்து என்ன?
Similar News
News December 25, 2025
SM-ஐ பயன்படுத்த வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடு

ராணுவ வீரர்கள் SM-ஐ பயன்படுத்த பாதுகாப்பு அமைச்சகம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி யூடியூப், X, இன்ஸ்டாவை பார்க்க மட்டுமே அனுமதி, தகவல்களை பகிரும் பதிவுகளை வெளியிட தடை. வாட்ஸ்அப், டெலிகிராம், ஸ்கைப், சிக்னலில் பொதுவான தகவல்களை தெரிந்த நபர்களுக்கு மட்டும் பகிர வேண்டும். பணியாளர்கள்/முதலாளிகளின் தகவல்களை பெறுவதற்காக மட்டுமே LinkedIn-ஐ பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News December 25, 2025
7 நாள்களில் முகம் வெள்ளை ஆக இது போதும்!

யாருக்குதான் முகம் பளபளப்பாக மாறவேண்டும் என்ற ஆசை இருக்காது? உங்களுக்கும் அந்த ஆசை இருந்தால் 7 நாள்கள் தொடர்ந்து இந்த Skin care-ஐ செய்து பாருங்கள். தேவையான அளவு தயிரை எடுத்து தினமும் 15 நிமிடங்கள் முகத்திற்கு மசாஜ் செய்து பாருங்கள். அதேபோல கற்றாழை ஜெல்லையும் நீங்கள் பயன்படுத்தி பார்க்கலாம். இதை 7 நாள்களுக்கு செய்துவந்தால் நல்ல முன்னேற்றம் தெரியுமாம். SHARE.
News December 25, 2025
திமுக அரசின் அலட்சியத்தால் தொடர் விபத்து: அண்ணாமலை

திட்டக்குடியில் <<18664505>>அரசு பஸ்<<>> மோதி 9 பேர் உயிரிழந்த செய்தி வருத்தம் அளித்ததாக அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார். சமீபகாலமாக அரசு பஸ்கள் விபத்துக்குள்ளாவதும், உயிரிழப்புகள் ஏற்படுவதும் அதிகரித்துள்ளது. பஸ்களின் பராமரிப்பு, டிரைவர் பணிநேரம், பாதுகாப்பு விதிமுறைகளில் திமுக அரசு காட்டும் அலட்சியத்தின் விளைவே இத்தகைய தொடர் விபத்துக்கள். இதற்கு திமுக அரசே முழு பொறுப்பு என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.


