News March 3, 2025
உழவர்களின் கனிவான கவனத்திற்கு

தமிழ்நாடு அரசு விவசாயிகள் தங்கள் நில உடைமைகளை சரிபார்க்க பொது சேவை மையத்தில் இலவசமாக பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார். பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், நில உடமைகளை பதிவு செய்யும் பொருட்டு பொது சேவை மையத்தில் விவசாயிகளின் அடையாள சான்று ஆதார் அட்டை, பட்டா சிட்டா மற்றும் கைபேசி எண் இணைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Similar News
News January 14, 2026
பெரம்பலூர்: வாட்ஸ்ஆப் மூலமாக பான் கார்டு

பெரம்பலூர் மக்களே, வாட்ஸ்ஆப் மூலமாக பான் கார்டு பெற்று கொள்ளும் சிறப்பு அம்சத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு முதலில் உங்களது WhatsApp-ல் இருந்து ‘90131 51515’ என்ற எண்ணுக்கு ‘HI’ என மெசேஜ் அனுப்ப வேண்டும். பிறகு ஆதார் எண்ணை பதிவு பதிவிட்டு, PAN Card என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும், உங்க பான்கார்டு Whatsapp-ல் அனுப்பி வைக்கப்படும். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News January 14, 2026
பெரம்பலூர்: இதை பற்றி நீங்கள் அறிந்ததுண்டா?

பெரம்பலூர் மாவட்டம் சாத்தனூர் கிராமத்தில் புகழ்பெற்ற தேசிய கல்மரப் பூங்கா உள்ளது. இங்கு சுமார் 120 மில்லியன் ஆண்டு பழங்கால மரம் ஒன்று கல்லாக மாறியிருக்கலாம் என சொல்லப்படுகிறது. 1940ம் ஆண்டு தஞ்சாவூரில் இருந்து வந்த, இந்தியப் புவியியல் ஆய்வு மையத்தின், புகழ்பெற்ற புவியியலாளரான டாக்டர் எம்.எஸ். கிருஷ்ணனால் இது கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அனைவரும் தெரிந்து கொள்ள இதை ஷேர் பண்ணுங்க!
News January 14, 2026
பெரம்பலூர்: பொங்கல் விழாவிற்கு ஆட்சியர் அழைப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் வழியில் உள்ள திடலில், ஜன.15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் மாலை 5 மணி முதல் 8 மணி வரை, பொங்கல் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. இந்த கலை விழாவை பொதுமக்கள் அனைவரும் உற்சாகத்துடன் கண்டுகளிக்க மாவட்ட ஆட்சியர் மிருணாளினி அழைப்பு விடுத்துள்ளார்.


