News March 3, 2025
திமுக கூட்டணியில் கொளுத்திப் போட்ட ஜெயக்குமார்

திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, இடதுசாரிக் கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. இதில் சில கட்சிகள் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், ஜெயக்குமார் மேலும் தீயை பற்ற வைத்துள்ளார். திமுக கூட்டணி உடையும் என அவர் அளித்த பேட்டி, அக்கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. எந்த கட்சி வெளியேறும் என ஜெயக்குமார் கூறாத நிலையில், திருமாவளவன் விசிக MLA எண்ணிக்கை குறித்து பேசியது யூகங்களை கிளப்பியுள்ளது.
Similar News
News March 4, 2025
இன்றைய (மார்ச்.04) நல்ல நேரம்

▶மார்ச்- 04 ▶மாசி – 20 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 08:30 AM – 09:00 AM & 04:30 PM – 05:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 07:30 PM – 08:30 PM ▶ராகு காலம்: 03:00 PM – 04:30 PM ▶எமகண்டம்: 09:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM- 01:30 PM ▶திதி: பஞ்சமி ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால் ▶சந்திராஷ்டமம்: அஸ்தம் ▶நட்சத்திரம் : அசுவினி.
News March 4, 2025
ராமஜெயம் கொலை வழக்கு: ஐகோர்ட் முக்கிய உத்தரவு

அமைச்சர் கே.என். நேருவின் தம்பியான ராமஜெயம் கொலை வழக்கானது, சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறப்பு புலனாய்வுக் குழுவில் இருந்த ஜெயக்குமார், திருவாரூர் எஸ்.பி.யாக மாற்றப்பட்டதால் இவ்வழக்கில் தொய்வு ஏற்பட்டிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்ட நீதிபதிகள், ஜெயக்குமாருக்கு பதிலாக திருச்சி சரக டிஐஜி மற்றும் தஞ்சை எஸ்.பி.யை நியமித்து உத்தரவிட்டனர்.
News March 4, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச்.4) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டுமே இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!