News March 30, 2024
சென்னையில் பட்டப்பகலில் நடந்த சம்பவம்

தி.நகர் மேட்லி, இரண்டாவது தெருவைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (57). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். கடந்த 29-ம் தேதி வேளச்சேரியில் உள்ள இடத்தை விற்பது தொடர்பாக ஒருவரைச் சந்திக்க வேளச்சேரி காந்தி ரோடு செல்வா நகருக்குச் சென்றார். அப்போது மூன்று பைக்கில் வந்த மர்ம கும்பல், பழனிச்சாமியை வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்தது.
Similar News
News August 13, 2025
JUST IN: தமிழிசை சௌந்தரராஜன் மீது வழக்கு பதிவு

தூய்மைப் பணியாளர்கள் 13-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனையடுத்து தூய்மைப் பணியாளர்களை உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின் படி கலைந்து செல்ல காவல்துறை அறிவுறுத்தி வந்தனர். இந்நிலையில் அவர்களை தமிழிசை சௌந்தரராஜன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதால், அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். முன்னதாக தூய்மைப் பணியாளர்களை கைது செய்ய கூடாது என தமிழிசை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
News August 13, 2025
கூக்குரல் கேட்கலையா? உதயநிதிக்கு கண்டனம்

நடிகர் ரஜினி நடிப்பில் உருவான ‘கூலி’ திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னையில் கடந்த 2 வாரங்களாக தூய்மை பணியாளர்கள் சாலையில் போராடி வரும் நிலையில், அதனை கண்டுகொள்ளாத துணை முதல்வர் ‘கூலி’ படத்திற்கு வாழ்த்து கூறியுள்ளார் என்றும் தூய்மை பணியாளர்களின் கூக்குரல் அவருக்கு கேட்கவில்லையா? என்றும் நெட்டிசன்கள் கடுமையாக விளாசியுள்ளனர்.
News August 13, 2025
சென்னை மாவட்ட வாக்காளர்கள் கவனத்திற்கு…

சென்னை மக்களே, 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், தந்தை பெயர், EPIC எண், வயது, பாலினம், முகவரி சரியாக உள்ளதா? என எளிதாக தெரிந்து கொள்ளுங்கள். இந்த <