News March 3, 2025

திண்டுக்கல்: +2 தேர்வு எழுதும் 21,817 பேர்

image

தமிழகம் முழுவதும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் 216 பள்ளிகளைச் சேர்ந்த 10,361 மாணவர்கள், 11,451 மாணவிகள் என மொத்தம் 21,817 பேர் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதுகின்றனர். மாவட்டத்தில் 86 மையங்களில் இந்த தேர்வு நடைபெறுகிறது. தனித்தேர்வர்களாக 273 பேர் எழுதுகின்றனர்.

Similar News

News December 6, 2025

திண்டுக்கல்: வாக்காளர் பட்டியல் விபரங்கள்! EASY WAY

image

மக்களே வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு செக் பண்ணுங்க.

புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx

பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx (ம) https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx

வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய <>இங்கு கிளிக்<<>> செய்யுங்க. SHARE பண்ணுங்க

News December 6, 2025

திண்டுக்கல் மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு!

image

திண்டுக்கல்: இன்று (டிச.6) பாபர் மசூதி இடிப்பு நாளை முன்னிட்டு நேற்று திண்டுக்கல்லில் ஆய்வாளர் தூயமணி வெள்ளைச்சாமி தலைமையில் ரயில்வே போலீஸ், RPF, வெடிகுண்டு தடுப்பு பிரிவு, மோப்ப நாய் பிரிவு இணைந்து ரயில் நிலையம் முழுவதும் சோதனை நடத்தினர்.பழனி ரயில் நிலையத்திலும் சார்பு ஆய்வாளர்கள் பாஸ்கரன், கணேசன் தலைமையில் பயணிகள் உடமைகள், நடைமேடை, வாகன நிறுத்துமிடங்கள் அனைத்திலும் கடும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

News December 6, 2025

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

image

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை நேற்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அறிவிப்பை வெளியிட்டது. வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பறிக்கும் மோசடிகளில் அகப்படாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென கேட்டுக் கொண்டது. போலி வேலை வாய்ப்புகளை நம்பாதீர்கள் என்றும், சந்தேகத்துக்கிடமான தகவல்கள் ஏற்பட்டால் உடனடியாக சைபர்கிரைம் உதவி எண் 1930ஐ தொடர்புகொள்ளலாம். www.cybercrime.gov.in தளத்தில் புகார் அளிக்கலாம்.

error: Content is protected !!