News March 3, 2025
அமைச்சர் மகளிடம் பாலியல் சீண்டல்.. போக்சோ பாய்ந்தது

மகாராஷ்டிரா மாநிலத்தில் மத்திய இணை அமைச்சர் ரக்சா காட்சேயின் மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக 7 பேர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜல்காவ்னில் கடந்த வெள்ளி சிவராத்திரி விழா கொண்டாட்டத்தில் காட்சேயின் சிறு வயது மகளை பின்தொடர்ந்து சிலர் தொந்தரவு செய்துள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் சிலரை போலீஸ் தேடுகிறது.
Similar News
News March 18, 2026
அரசு இயந்திரத்திற்கு வெட்கக்கேடு: நயினார்

<<19356260>>விளாத்திகுளத்தில் <<>> பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட மாணவியின் குடும்பத்தை நயினார் சந்தித்து ஆறுதல் கூறினார். தனது X பதிவில், மாணவியின் குடும்பத்தாரின் கண்ணீர் முகம் தனது நெஞ்சில் ஆறாத வடுவாக உறுத்துகிறது. இவ்வழக்கில், இன்னும் குற்றவாளியை கண்டுபிடிக்காதது அரசு இயந்திரத்திற்கு வெட்கக்கேடு; ஆட்சி மாற்றம் நிகழ்ந்தவுடன் உயிரிழந்த மாணவிக்கு உரிய நீதி கிடைக்கும் என கூறியுள்ளார்.
News March 18, 2026
வீட்டு கேஸ் சிலிண்டர் உற்பத்தி உயர்ந்தது

சிலிண்டர் தட்டுப்பாட்டால் பலரும் போட்டி போட்டுக் கொண்டு கேஸ் புக்கிங் செய்துவருகின்றனர். இந்நிலையில், வீட்டு கேஸ் சிலிண்டர் உற்பத்தி 38% அதிகரித்துள்ளதாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனவே, பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் கூறியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, 45 நாள்களுக்கு ஒருமுறை வீட்டு கேஸ் சிலிண்டர் புக் செய்யலாம். SHARE
News March 18, 2026
இந்த WhatsApp நம்பர்கள் உங்க போனில் அவசியம்!

ATM கார்டு திருடுப் போதல், வங்கிக் கணக்கில் பணம் மாயமாதல் போன்ற எந்த பிரச்னையாக இருந்தாலும், முதலில் கைகொடுப்பது வங்கிகள்தான். எனவே, வங்கிகளின் WhatsApp சேவை எண்கள் போனில் இருப்பது அவசியம் *HDFC- 70700 22222 *SBI- 90226 90226 *Indian Bank- 87544 24242 *ICICI- 86400 86400 *Union Bank- 96666 06060 *Axis bank- 70361 65000 *IDBI- 88600 45678 *Kotak- 77108 11811 *PNB- 92640 92640. SHARE IT.


