News March 3, 2025
இன்றைய பெட்ரோல், டீசல், CNG விலை நிலவரம்

இந்தியாவில் எரிபொருள் விலை சர்வதேச கச்சா எண்ணெய் விலை மற்றும் நாணய மதிப்பின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை தினமும் மாறுபடும். சென்னையில் இன்று (பிப்.28) 1 லிட்டர் பெட்ரோல் ரூ.100.80க்கும், 1 லிட்டர் டீசல் ரூ.92.39க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், இயற்கை எரிவாயு (CNG) 1 கிலோ ரூ.90.50க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Similar News
News August 23, 2025
சென்னையில் தாலுகா வாரியாக மழை நிலவரம்

சென்னையில் நேற்று காலை 8:30 மணி முதல் இன்று காலை வரை பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துள்ளது. அதிகபட்சமாக, சோழிங்கநல்லூரில் 98.5 மி.மீ, புரசைவாக்கத்தில் 77.6 மி.மீ, அம்பத்தூரில் 58 மி.மீ, தண்டையார்பேட்டையில் 46 மி.மீ, மாம்பலத்தில் 41.2 மி.மீ மற்றும் பெரம்பூரில் 40.3 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இந்த தகவலை தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை தெரிவித்துள்ளது.
News August 23, 2025
சென்னையில் தூய்மை பணியாளர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

சென்னை, கண்ணகி நகரில் இன்று காலை தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த வரலட்சுமி (50) என்பவர், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இவர் சென்னை மாநகராட்சியில் ஒப்பந்தப் பணியாளராக வேலை செய்து வந்தவர். இந்த துயர சம்பவத்தைத் தொடர்ந்து, பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவியர் மின்சார கம்பிகள் மற்றும் உபகரணங்கள் உள்ள இடங்களில் கவனமாக செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
News August 23, 2025
சென்னையில் தெருநாய் தொல்லையில் இருந்து தப்பிக்க! 2/2

நீங்கள் பயந்தால் அதை நாய்களால் உணர முடியும். எனவே பயத்தை வெளிக்காட்டாமல் இருக்க வேண்டும். நாய் உங்களை நோக்கி வந்தால் அதை திசை திருப்ப உங்கள் கையில் இருக்கும் பொருளை கீழே தூக்கி வீசலாம் அல்லது கீழே குனிந்து கல் எடுப்பது போல பாவனை செய்யலாம். பைக்கில் போனால் நாயை கண்டதும் வேகமாக முறுக்க கூடாது. முக்கியமாக நாய் மீது எதையும் தூக்கி வீச கூடாது. இதை உங்கள் குழந்தைகளுக்கு சொல்லி கொடுங்கள். ஷேர் பண்ணுங்க!