News March 3, 2025

வாக்கிங் எப்படி, எப்போது செய்வது பெஸ்ட்..?

image

இயற்கையான திறந்தவெளியில் நடைபயிற்சி செய்வது அதிக நன்மைகளைக் கொடுக்கும். புல்வெளிகள், கடற்கரைகள், மலைப்பகுதி போன்ற இயற்கை பகுதியில் நடப்பதால் உடல், மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இது, நரம்பு-தசை ஒருங்கிணைப்பை அதிகரிக்கிறது, ஸ்ட்ரெஸ்ஸை கொடுக்கும் கார்டிசோலைக் குறைக்கிறது என்கிறார்கள். அதே போல, அதிகாலை 4:30 – 8:00 மணிக்குள்ளும், மாலை 4:30 – 7:00 மணிக்குள் நடப்பது நல்ல பலன்களை அளிக்கும். SHARE IT.

Similar News

News April 3, 2026

காங்., வேட்பாளர் பட்டியல் வெளியானது

image

சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 27 தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் – செல்வப்பெருந்தகை, பொன்னேரி – துரை சந்திரசேகர், வேளச்சேரி – ஹசன் மெளலானா, சோளிங்கர் – முனிரத்னம், ஊத்தங்கரை – குப்புசாமி, கிருஷ்ணகிரி – செல்லக்குமார், பென்னாகரம் – ஜி.கே.எம்.தமிழ்க்குமரன், ஆத்தூர் – அர்த்தநாரி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். <<-se>>#TNElection2026<<>>

News April 3, 2026

வீட்டு சிலிண்டர் விலை.. மகிழ்ச்சி செய்தி வெளியானது

image

PAYTM ஆப் மூலம் சிலிண்டர் புக் செய்பவர்களுக்கு ₹200 வரை கேஷ்பேக் வழங்கப்படும் என சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. பாரத் கேஸ், ஹெச்பி கேஸ், இன்டேன் வாடிக்கையாளர்கள் ‘CYLWIN’ என்ற ப்ரோமோ குறியீட்டைப் பயன்படுத்தி கேஷ்பேக் பெற்றுக் கொள்ளலாம். டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கவும், விலை உயர்வால் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் நோக்கிலும் இந்த முன்னெடுப்பை தொடங்கியுள்ளதாக PAYTM தெரிவித்துள்ளது. SHARE IT

News April 3, 2026

வேட்பாளர்களுக்கு தோள் கொடுப்பேன்: அண்ணாமலை

image

பாஜக வேட்பாளர் பட்டியலில் <<19556550>>அண்ணாமலை<<>> பெயர் இடம்பெறாதது விவாதத்துக்கு உள்ளாகியுள்ள நிலையில், அவரது ட்வீட் கவனம் பெற்றுள்ளது. அதில், ஒரு தொண்டனாக போட்டியிடும் பாஜக & கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு தோள் கொடுத்து வெற்றி பெற வைப்பேன் என்று தெரிவித்துள்ளார். 210 தொகுதிகளில் NDA கூட்டணி வெற்றி என்ற இலக்கை அடைய அனைவருக்காகவும் தீவிர பிரசாரம் செய்வேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!