News March 3, 2025
ரேஷன் அட்டைதாரர்களுக்கு 31ஆம் தேதி வரை கெடு

ரேஷனில் வழங்கப்படும் மலிவு விலை பொருட்கள் சரியான நபர்களுக்கு சென்றடைவதை உறுதி செய்ய eKYC செய்வது கட்டாயமாக்கி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, இம்மாதம் 31ஆம் தேதி வரை ரேஷன் அட்டைதாரர்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்குள் eKYC செய்யவில்லையெனில், ரேஷன் அட்டை ரத்து செய்யப்படும் அபாயம் உள்ளது. தமிழகத்தில் 72 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் eKYC செய்யவில்லை என சொல்லப்படுகிறது.
Similar News
News April 7, 2026
ராகுல் ஸ்டாலினுக்கு இடையே புகைச்சலா?

சீட் ஷேரிங் விவகாரத்தில் இருந்தே திமுக – காங்., இடையே ஒரு சைலண்ட் war நடப்பதாக பேசப்படுகிறது. அதற்கு தோதாக புதுவையில் ஸ்டாலினும் ராகுலும் காலை, மாலை என தனித்தனியே பிரசாரம் செய்திருக்கின்றனர். அத்துடன், TN-ல் பிரசாரம் செய்ய ராகுல் தேதி ஒதுக்கவில்லை எனவும் பேசப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே புகைச்சலா எனவும், இதனால் TN-ல் இருவரும் ஒன்றாக பிரசாரம் செய்வார்களா என்றும் கேள்வி எழுந்துள்ளது.
News April 7, 2026
உழைத்தவர்களின் வாய்ப்பை தட்டிப் பறித்தாரா தமிழிசை?

உழைத்தவர்களுக்கு வாய்ப்பை விட்டுக்கொடுக்காமல் தேர்தலில் போட்டியிடுவதாக பாஜகவினர் சிலர் விமர்சித்தது குறித்து தமிழிசை பதிலளித்துள்ளார். அவர்களின் ஆதங்கம் புரிகிறது என்ற அவர், ஆனால் தன்னுடைய டாக்டர் பணியை துறந்து, பாஜகவுக்காக 27 ஆண்டுகள் உழைத்ததாக கூறியுள்ளார். இதனால்தான் தலைமை தனக்கு உரிய பதவிகளை வழங்கியது எனவும், தான் யாருடைய வாய்ப்பையும் தட்டிப் பறிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
News April 7, 2026
துரைமுருகன் மீது வழக்குப்பதிவு

பறக்கும்படையினர் அளித்த புகாரின் அடிப்படையில், காட்பாடி தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் துரைமுருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேட்புமனு தாக்கலின் போது பட்டாசு வெடித்தது, போக்குவரத்துக்கு இடையூறு செய்தது உள்ளிட்ட பிரிவுகளில் துரைமுருகன், அவரது மகன் கதிர் ஆனந்த் உள்ளிட்டோர் மீது காட்பாடி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. <<-se>>#TNElection2026<<>>


