News March 3, 2025

ஆன்லைன் மோசடி தடுக்கும் முறைகள் குறித்த விழிப்புணர்வு

image

சேலம் மாவட்ட காவல்துறையின் சார்பில் பொதுமக்களுக்காக பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி செல்போன் வாயிலாக நூதன முறையில் மோசடி பேர்வழிகள் ஏமாற்றும் முறைகள் குறித்து சமூகவலைதளங்கள் விழிப்புணர்ச்சி செய்து வருகின்றனர். போலி வாடிக்கையாளர் சேவை மையம் தொண்டு நிறுவனம் போலி கணக்கெடுப்பு, மிஸ்டு கால் அழைப்பு என நடைபெறும் மோசடி குறித்து விளக்கியுள்ளனர்.

Similar News

News November 16, 2025

சேலம்: GPay / PhonePe / Paytm பயணிகள் கவனித்திற்கு!

image

சேலம் மக்களே, தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News November 16, 2025

சேலம்: கத்திமுனையில் தம்பதியிடம் அதிர்ச்சி சம்பவம்!

image

சேலம் மாசிநாயக்கன்பட்டியை சேர்ந்த தம்பதி சந்திரசேகரன் – பூங்கொடி. இவர்களது வீட்டுக்குள் மர்ம நபர்கள் புகுந்து, தம்பதியிடம் கத்தியை காட்டி ரூ.10 லட்சம் கேட்டு மிரட்டினர். பணம் இல்லை என்று தெரிவித்ததால், வீட்டில் இருந்த 15 பவுன் நகையை கொள்ளையடித்து தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து, சந்தேகத்தின் பேரில் 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 16, 2025

வாழப்பாடி: 100 ஆண்டு ரகசியத்தை உடைத்த மாணவன்!

image

சேலம் மாவட்டம் வாழப்பாடியில் கடலூர் சாலையில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் வைக்கப்பட்ட 100 ஆண்டு பழமையான ‘மைல்கல்’ உள்ளது. இக்கல்லில் ‘செக்சன் லிமிட்’ என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு கீழே சில குறியீடுகளும் காணப்படுகின்றன. இந்தக் கல்வெட்டை, வாழப்பாடியை சேர்ந்த 11-ஆம் வகுப்பு மாணவன் சிபிஅரசு ‘படி’ எடுத்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளார். இந்த மாணவருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

error: Content is protected !!