News March 3, 2025
பாஜக vs காங்: யார் ஹிந்து விரோதி?

யார் ஹிந்து மதத்திற்கு எதிரானவர்கள் என்பதில் பாஜக- காங். இடையே வார்த்தை போர் முற்றியுள்ளது. ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவிலும், மகா கும்பமேளாவில் பங்கேற்காமல் காங். மூத்த தலைவர்கள் ஹிந்து விரோதிகள் என நிரூபித்துள்ளதாக பாஜக சாடியுள்ளது. இதற்கு பதிலடி கொடுத்த காங்., பல மத்திய அமைச்சர்கள், பாஜக கூட்டணி கட்சி தலைவர்களின் பெயர்களை பட்டியலிட்டு இவர்களும் ஹிந்து விரோதிகள் தானே என சாடியுள்ளது.
Similar News
News April 8, 2026
தென்காசி : கேஸ் சிலிண்டர் பயன்படுத்துறீங்களா..?

தென்காசி மக்களே, எதிர்பாராத நேரங்களில் வீட்டின் சமையல் கேஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டால், 1906 என்ற அவசர உதவி எண்ணை அழைக்கவும். இது இந்தியன் ஆயில், HP மற்றும் பிபிசிஎல் போன்ற அனைத்து எல்பிஜி நிறுவனங்களுக்கும் பொதுவான அவசர உதவி எண் ஆகும். இந்த எண் 24 மணி நேரமும் கிடைக்கும். மேலும், 1800 233 3555 என்ற எண்ணையும் தொடர்பு கொள்ளலாம். SHARE IT
News April 8, 2026
அண்ணாமலைக்கு முக்கிய பதவி.. புதிய தகவல் கசிந்தது

அண்ணாமலையின் <<19594854>>திடீர் டெல்லி பயணம்<<>> தொடர்பாக புதிய தகவல் கசிந்துள்ளது. மோடி, அமித்ஷா அழைப்பின்பேரில் அவர் டெல்லி சென்றிருப்பதாகவும், தேர்தலில் போட்டியிடாத நிலையில் அவருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. L.முருகன் தேர்தலில் போட்டியிடும் நிலையில், அவரது மத்திய இணையமைச்சர் பதவி அண்ணாமலைக்கு வழங்கப்படும் என்றும் பேச்சு அடிபடுகிறது.
News April 8, 2026
IPL: இன்றும் மழைக்கு வாய்ப்பு

IPL-ல், இன்று DC, GT அணிகள் டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் மோதுகின்றன. ஏற்கெனவே KKR Vs PBKS, RR Vs MI அணிகள் இடையிலான போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்றைய போட்டியிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை 4-6 மணி வரை 15% மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டால் ஓவர்கள் குறைக்கப்பட வாய்ப்புள்ளது.


