News March 3, 2025

பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

image

இன்று (மார்ச்.3) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டுமே இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!

Similar News

News April 4, 2026

பெயின்ட் விலையில் எதிரொலித்த போரின் தாக்கம்

image

ஈரான் போரின் தாக்கம் பெயின்ட் விலையிலும் எதிரொலித்துள்ளது. பெட்ரோலிய பொருள்களின் விலை அதிகரித்ததால், முன்னணி நிறுவனங்கள் பெயின்ட் விலையை 10% வரை உயர்த்தியுள்ளன. இதனால், 20 லிட்டர் பெயின்டை கூடுதலாக ₹400 வரை கொடுத்து வாங்க வேண்டிய சூழல் இருப்பதாக வீடு கட்டுவோர் வேதனை தெரிவிக்கின்றனர். விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

News April 4, 2026

நானும் மதுரைக்காரன் தான்: சுந்தர்.சி

image

மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் சுந்தர்.சி, மனைவி குஷ்புவுடன் சென்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், தான் வெளியூர்காரன் என்பதே எதிர்க்கட்சியினர் வைக்கும் ஒரே குற்றச்சாட்டு என்றார். நான் வெளியூர்காரன் அல்ல. என் பூர்விகம் பழனி, இனி மதுரை தான் என் ஊர் என்ற அவர், மதுரையில் வீடு பார்த்துவிட்டதாக கூறினார். <<-se>>#TNElection2026<<>>

News April 4, 2026

IPL TOSS: மும்பை இந்தியன்ஸ் பேட்டிங்!

image

MI-க்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற DC பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. உடல்நல குறைவால் இன்றைய போட்டியில் பாண்ட்யா பங்கேற்காததால், சூர்யகுமார் MI கேப்டனாக செயல்படுகிறார். மேலும், தீபக் சஹார், மிட்செல் சாண்ட்னர் ஆகியோரும் களம் காண்கின்றனர். டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இரு அணிகளும் 13 முறை மோதியுள்ள நிலையில், அதிகபட்சமாக DC 7 முறை வென்றுள்ளது.

error: Content is protected !!