News March 3, 2025
தூத்துக்குடி மாவட்ட இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (மார்ச்.02) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை ரோந்துப் பணிகளில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் தொடர்பு எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு 0461-2340393 என்ற தொலைபேசி எண்ணில் அழைக்கலாம். மேலும் 100 அல்லது தூத்துக்குடி மாவட்ட ஹலோ போலீஸ் 9514144100 எண்ணையும் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 3, 2025
தூத்துக்குடி துறைமுகத்தில் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசிகள்

ஆப்பிரிக்கா தென் அமெரிக்கா நாடுகளில் மஞ்சள் காய்ச்சல் நோய்க்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இதனை தடுக்கும் பொருட்டு, தூத்துக்குடி துறைமுகத்தில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமை மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசிகள் ஆப்பிரிக்கா தென் அமெரிக்காவிற்கு செல்வோர்கள் அங்கிருந்து வருபவர்களுக்கு வழங்கப்படுகிறது. ரூபாய் 300 கட்டணமாக செலுத்தி துறைமுக சுகாதார அதிகாரிகளிடம் இதனை பெற்றுக் கொள்ளலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
News March 3, 2025
தூத்துக்குடி இளைஞர்களுக்கு வாய்ப்பு

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் முன்னணி நிறுவனங்களில் ஊக்கத் தொகையுடன் பாரத பிரதமரின் இன்டர்ன்ஷீப் தொழில் பயிற்சி பெறுவதற்கான வேலை வாய்ப்பு பதிவு செய்யும் முகாம் இம்மாதம் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. கோரம்பள்ளத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறும் இந்த முகாமை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தூத்துக்குடிஆட்சியர் இளம்பகவத் கேட்டுக் கொண்டுள்ளார்.*நண்பர்களுக்கு பகிரவும்*
News March 3, 2025
தூத்துக்குடி விவசாயிகளுக்கு..மார்ச் 15 வரை அவகாசம்!

தூத்துக்குடி மாவட்ட வேளாண் துறை இணை இயக்குனர் அலுவலகம் நேற்று(மார்ச் 2) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண் அடுக்குத் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் நில உடமைகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. இதுவரை 42,174 விவசாயிகளின் நில உடமை மட்டுமே வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பதிவு செய்யாதோர் மார்ச் 15க்குள் பதிவு செய்திடுமாறு அதில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.