News March 2, 2025
3 நாட்களுக்கு வெப்பநிலை உயரும்: IMD அலர்ட்

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கலாம் என IMD எச்சரித்துள்ளது. பிப்ரவரி மாதத்திலேயே வெயில் கொளுத்த தொடங்கிவிட்டது. ஆங்காங்கே மழை பெய்ததால் சற்று வெப்பம் தணிந்த நிலையில், நாளை முதல் 6ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2° செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் வெப்பம் எப்படி? கமெண்ட் பண்ணுங்க.
Similar News
News March 19, 2026
‘பாஜக தேர்தல் அறிக்கையில் மகளிருக்கு சர்ப்ரைஸ்’

பாஜகவின் தேர்தல் அறிக்கை தயாராகிவிட்டதாக தமிழிசை தெரிவித்துள்ளார். இன்று மாலைக்குள் தேர்தல் அறிக்கை இறுதிசெய்யப்பட்டு, மாநில தலைவர் நயினாரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவித்தார். விரைவில் நயினார் அதனை வெளியிடுவார் எனவும் தமிழிசை கூறியுள்ளார். பாஜகவின் தேர்தல் அறிக்கையில் மகளிர், விவசாயிகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் பேசியுள்ளார்.
News March 19, 2026
நெருங்கும் தேர்தல்.. இந்த போன் நம்பரை தெரிஞ்சிக்கோங்க!

தேர்தல் நாள் நெருங்கிவரும் நிலையில், வாக்காளர்களாகிய உங்களுக்கு வாக்குச்சாவடி மையத்தை கண்டறிவதில் பல விதமான சந்தேகங்கள் ஏற்படலாம். தேர்தல் விதிமீறல் குறித்த புகார் அளிக்க வேண்டிய சூழலும் உருவாகலாம். சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளவும், புகார் தெரிவிக்கவும் தேர்தல் ஆணையத்தின் 1800-4252-1950 என்ற ஹெல்ப்லைன் எண்ணை தொடர்பு கொள்ளலாம். இது 24 மணி நேர சேவையாகும். இந்த தகவலை அனைவருக்கும் பகிரவும்.
News March 19, 2026
கடன் தள்ளுபடி.. புதிய தேர்தல் அறிவிப்பு

மாணவர்களின் கல்விக் கடன் முற்றிலும் ரத்து செய்யப்படும் என்று சீமான் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார். மேலும், *படிப்படியாக ஓராண்டிற்குள் மதுக்கடைகள் மூடப்படும் *இடஒதுக்கீட்டில் தமிழர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் வகையில் மாற்றம் கொண்டுவரப்படும் *ஆற்றுநீரை பயன்படுத்தும் குளிர்பான ஆலைகளுக்கு தடை விதிக்கப்படும் * 60 வயதிற்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும்.


