News March 2, 2025

இந்தியா அபார வெற்றி

image

சாம்பியன்ஸ் டிராபியில் நியூசி.க்கு எதிரான போட்டியில் இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த IND 249 ரன்கள் எடுத்தது. இந்த எளிய இலக்குடன் களமிறங்கிய NZ அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்து 205 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் வில்லியம்சன் 81 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் அட்டகாசமாக பந்துவீசிய வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

Similar News

News March 18, 2026

திருமணம் செய்யாமல் உறவு.. தமிழ் நடிகை விருப்பம்

image

திருமணம் செய்துகொள்ளாமல் உறவில் இருப்பதே நல்லது எனவும் அதையே தான் விரும்புவதாகவும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி தெரிவித்துள்ளார். வாழ்க்கைத் துணை வேண்டும் என்பது உண்மை தான்; ஆனால், சேர்ந்து வாழும்போது இருவருக்குமே நிம்மதி இல்லாத ஒரு நிலை வரக்கூடாது. அண்மைக் காலமாக திரையுலகில் பலரும் விவாகரத்து பெற்று வரும் நிலையில், ஐஸ்வர்யாவின் இந்த கருத்து SM-ல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. உங்கள் கருத்து என்ன?

News March 18, 2026

FLASH: விசிக தொகுதிப் பங்கீடு இன்று இறுதியாகிறது!

image

<<19413921>>திமுகவில் 6 கட்சிகளுக்கு<<>> தொகுதிப் பங்கீடு இறுதியான நிலையில், இன்று மாலை ஸ்டாலினை திருமாவளவன் நேரில் சந்தித்து பேசுகிறார். அப்போது தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த முறை 6 தொகுதிகளில் போட்டியிட்ட விசிக 4-ல் வென்றது. இம்முறை கூடுதல் தொகுதிகள் வேண்டும் என திருமாவளவன் நெருக்கடி கொடுத்து வருகிறார். அதனால் தான் தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்தது.

News March 18, 2026

அனைத்து ரேஷன் கார்டுக்கும்.. புதிய அறிவிப்பு

image

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு பெரிய வசதியை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. பல்வேறு சேவைகளை ஒரே இடத்தில் வழங்கும் UMANG App-ல், இப்போது ‘மேரா ரேஷன்’ என்ற அம்சத்தை மத்திய அரசு சேர்த்துள்ளது. இதன் மூலம் ரேஷன் அட்டை தொடர்பான எந்தவொரு பணிக்காகவும் அரசு அலுவலகங்களுக்கோ, ரேஷன் கடைகளுக்கோ செல்வதற்கு பதிலாக, உமாங் செயலி மூலம் உங்கள் மொபைல் போனிலேயே ரேஷன் சேவைகளை பெறலாம்.

error: Content is protected !!