News March 2, 2025
காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு

காஞ்சிபுரம் மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில ஆசிரியர் தகுதி தேர்வு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வாயிலாக வரும் 6ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கணினி வழியில் நடைபெற உள்ள இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள நிலையில், வரும் 6ஆம் தேதிக்கான தேர்வுக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன என கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்தார்.
Similar News
News April 21, 2025
காஞ்சிபுரத்தில் வாட்டி வதைக்கும் வெயில்

காஞ்சிபுரத்தில், வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதில் இருந்து தற்காத்துக் கொள்ள போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பயணத்தின்போது குடிநீர் எடுத்துச் செல்லுங்கள். ORS, எலுமிச்சை சாறு, இளநீர், மோர் போன்றவற்றை குடிக்கலாம். மென்மையான பருத்தி ஆடைகளை அணியுங்கள். வெளியே செல்லும்போது காலணி, தொப்பி அணிந்து, குடை பிடித்து செல்லுங்கள். மதிய நேர வெயிலில் செல்வதை முடிந்தளவு தவிர்க்க வேண்டும். ஷேர் பண்ணுங்க
News April 21, 2025
ஓட்டுநர், நடத்துநர் பணி: இன்றே கடைசி நாள்

போக்குவரத்து கழகத்தில் 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்கள் உள்ளன. 24 – 40 வயதுடையவராக இருக்க வேண்டும். 10ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். 18 மாதங்கள் கனரக வாகனம் ஒட்டியதற்கான அனுபவம் வேண்டும். எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்காணல் உண்டு. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால், உடனே இந்த லிங்கை <
News April 21, 2025
வெயிலில் இருந்து தற்காத்து கொள்ள கலெக்டர் அட்வைஸ்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்புக்காக பேருந்து நிலையங்கள், நிறுத்தங்கள் மற்றும் பொது இடங்களில் குடிநீர் குடில்கள், ORS கரைசல்கள் உள்ளிட்ட வசதிகள் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்று கலெக்டர் தெரிவித்தார். மேலும், வெயிலில் நேரடியாக பணியாற்றும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். தொழில் செய்யும் இடங்களில் குடிநீர் இருக்க வேண்டும் என்றார். ஷேர் பண்ணுங்க