News March 2, 2025
நியூசி.க்கு எதிரான போட்டி.. விராட் கோலி புதிய சாதனை

சாம்பியன்ஸ் டிராபியில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் விராட் கோலி புதிய சாதனை படைத்தார். இப்போட்டி கோலியின் 300ஆவது ஒருநாள் போட்டி ஆகும். இதன்மூலம் 300ஆவது ஒருநாள் போட்டியில் விளையாடும் 7ஆவது இந்திய வீரர் ஆவார். மேலும் சர்வதேச அளவில் 18ஆவது வீரர் ஆவார். இப்பட்டியலில் அப்ரிடி 398 போட்டிகளுடன் முதலிடத்தில் உள்ளார். இந்திய வீரர்களில் தோனி 350 போட்டிகளுடன் 4ஆவது இடத்தில் உள்ளார்.
Similar News
News April 9, 2026
கோவை: இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (09.04.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News April 9, 2026
வங்கிக் கணக்கில் ₹6,000.. காங்கிரஸ் வாக்குறுதி

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, 50 வாக்குறுதிகள் கொண்ட தேர்தல் அறிக்கையை <<19607806>>காங்கிரஸ்<<>> வெளியிட்டுள்ளது. அவற்றில் முக்கியமானவை *நிலமற்ற விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ₹6,000 நிதியுதவி வழங்கப்படும். *முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை ₹2,000 ஆக உயர்த்தப்படும். *அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு 10% ஆக அதிகரிக்கப்படும். *இரு மொழிக் கொள்கையே தமிழகத்தில் பின்பற்றப்படும்.
News April 9, 2026
கனிமொழி ஒரு செல்லாத காசு: EPS

கனிமொழி ஒரு செல்லாத காசு, திமுகவிலேயே அவருக்கு வேலையில்லை என EPS சாடியுள்ளார். ராயபுரத்தில் தேர்தல் பரப்புரை செய்த அவர், 2G வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. மற்றவர்களை நம்பி ஏதாவது பேசி மீண்டும் திஹாருக்கு சென்றுவிடாதீர்கள் என தெரிவித்துள்ளார். தோல்வி பயத்தில் EPS தரம் தாழ்ந்து பேசுவதாக <<19556166>>கனிமொழி <<>>கூறியதற்கு அவர் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார்.


