News March 2, 2025
கப்ஸா கதைகளை பேசுவதை நிறுத்துங்கள் ஆளுநரே

தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை திசை திருப்பவே ஆளுநர் கச்சத்தீவை கையில் எடுத்துள்ளதாக அமைச்சர் ரகுபதி குற்றம் சாட்டியுள்ளார். கச்சத்தீவு பற்றி திமுக மீது அவதூறு கூறுவோருக்கு முதல்வர் பலமுறை விளக்கம் தந்துவிட்டார். எத்தனை விளக்கம் கூறினாலும் ரவிக்கு விளங்கவில்லை. வாட்ஸ்அப் யுனிவர்சிட்டியில் வரும் வதந்திகளை வரலாறாக நினைத்துப் படிக்கும் ஆளுநர், கப்ஸா கதைகளை பேசுவதை நிறுத்த வேண்டும் என விமர்சித்தார்
Similar News
News August 6, 2025
WhatsApp இல்லாதவர்களுடனும் இனி சாட் செய்யலாம்!

‘Guest Chat’ என்ற புதிய அம்சத்தை வாட்ஸ்அப் விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. இதன்மூலம், வாட்ஸ்அப் பயன்படுத்தாதவர்களுடனும் இனி சாட் செய்யலாம். யாருடன் சாட் செய்ய விரும்புகிறோமோ அவர்களின் போன் எண்ணிற்கு SMS/Gmail/ சமூக வலைதள முகவரிக்கு இன்வைட்டிங் லிங்க் அனுப்பி அதன்மூலம் சாட் செய்யலாம். ஆனால், போட்டோ, வீடியோக்களை அனுப்பவோ, வாய்ஸ், வீடியோ கால்களை மேற்கொள்ளவோ முடியாது.
News August 6, 2025
ரஷ்யாவில் பாதுகாப்பு ஆலோசகர்

கச்சா எண்ணெய் விவகாரத்தில் அமெரிக்கா அச்சுறுத்தி வரும் நிலையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷ்யாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தியா – ரஷ்யா இடையிலான உறவை மேம்படுத்தும் நோக்கில் அவரது இந்த பயணம் அமைந்துள்ளது. மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும், இந்த மாத இறுதியில் ரஷ்யா பயணம் மேற்கொள்ள உள்ளார். டிரம்பின் வரி மிரட்டல் உள்ளிட்ட பல விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
News August 6, 2025
இந்தியாவிற்கு உரிமை உண்டு: ரஷ்யா

கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பான அமெரிக்காவின் மிரட்டலுக்கு இடையே இந்தியாவிற்கு ஆதரவாக ரஷ்யா குரல் கொடுத்துள்ளது. எந்தெந்த நாடுகளுடன் வர்த்தகம் செய்ய வேண்டும் என்று தேர்ந்தெடுக்கும் உரிமை இறையாண்மை கொண்ட நாடுகளுக்கு உண்டு எனவும், அமெரிக்காவின் வரிவிதிப்பு மிரட்டல்கள் சட்ட விரோதமானது என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது. இருப்பினும், 24 மணி நேரத்தில் இந்தியா மீது வரிவிதிப்பேன் டிரம்ப் தெரிவித்துள்ளார்.