News March 2, 2025
குடும்பத்திற்கு ரூ.3000.. திமுகவின் தேர்தல் திட்டம்!

மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண், தமிழ் புதல்வன் ஆகிய திட்டங்களில் அரசு மாதந்தோறும் தலா ₹1000 வழங்குகிறது. 2026ஆம் ஆண்டு தேர்தலுக்கான பரப்புரையில் இவை முக்கிய பங்கு வகிக்க உள்ளன. பெரும்பாலான குடும்பங்களில் அம்மா, மகள், மகன் என 3 பயனாளர்கள் உள்ளதால் ‘குடும்பத்திற்கு ₹3000 வழங்கும் அரசு’ என்ற பெயரில் பரப்புரையை மேற்கொள்ள திமுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது பற்றி உங்கள் கருத்து?
Similar News
News March 23, 2026
‘ஜன நாயகன்’ ரிலீஸ் எப்போது?.. குழப்பத்தில் படக்குழு

ஜன நாயகன் படம் மே 7-ல் ரிலீஸாக வாய்ப்புள்ளதாக ஏற்கெனவே தகவல் வெளியானது. இந்நிலையில், சென்சார் போர்டு மேலும் கெடுபிடி போட்டுள்ளதாக கூறப்படுகிறது. படத்தை பார்த்த மறுஆய்வுக் குழு, பல இடங்களில் திருத்தம் செய்யுமாறு தெரிவித்துள்ளனர். அதனை சரிசெய்த படக்குழு, மீண்டும் சென்சாருக்கு படத்தை அனுப்பியுள்ளது. ஆனால், தற்போது கூடுதலாக கட் கொடுத்திருக்கிறார்களாம். இதனால், படக்குழு குழப்பத்தில் ஆழ்ந்துள்ளது.
News March 23, 2026
கச்சா எண்ணெய் விலை சரிந்தது

ஈரான் மீதான தாக்குதலை 5 நாள்களுக்கு ஒத்திவைப்பதாக டிரம்ப் அறிவித்த நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை 10% சரிந்துள்ளது. தற்போது, ஒரு பேரல் பிரண்ட் கச்சா எண்ணெயின் விலை $102.26 ஆக குறைந்துள்ளது. அதேநேரம், ஹார்முஸ் நீரிணையில் கப்பல்களின் போக்குவரத்து முழுமையாக சீரடையும் பட்சத்தில், கச்சா எண்ணெயின் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது.
News March 23, 2026
EPS மீது கிருஷ்ணசாமி அதிருப்தி!

அதிமுக கூட்டணியில் பாஜக, அமமுக, பாமக கட்சிகளின் தொகுதி பங்கீடு இறுதியாகிவிட்டது. இந்நிலையில் GK வாசனை அடுத்து கிருஷ்ணசாமியும் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளார். EPS உடன் ஏற்கெனவே பேச்சுவார்த்தை நடத்தி விட்டதாகவும், தொகுதியை இறுதி செய்தால் தான் கூட்டணி முடிவை அறிவிக்க முடியும் எனவும் கூறியுள்ளார். 4 முனை போட்டியுள்ள நிலையில், யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி அமைப்போம் என அவர் முன்பே கூறியிருந்தார்.


